601 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 5ஜி இன்டர்நெட்.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!

By Bala Siva

Published:

 

ஜியோ வாடிக்கையாளர்கள் 601 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 5ஜி அன்லிமிடெட் இன்டர்நெட் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க முடியாமல் ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டத்தை அறிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு 5ஜி இன்டர்நெட் டேட்டா குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர் ஒருவர், எனது 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. இந்த பிளானில் உள்ளவர்கள் கூடுதலாக 601 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொண்டால் அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்கள் இந்த 5ஜி சேவையை அனுபவித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம், ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிஎஸ்என்எல் உள்பட வேறு சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை நாடினார். இதையடுத்து, தற்போது ஜியோ அடுத்தடுத்த சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 601 திட்டத்தை எந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் கிடைக்கும் என்றும், ஆனால் 299 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.