டிட்வா புயலைவிட வேகமாக வீசும் தவெக புயல்.. தவெக புயலில் சிக்கிய முன்னாள் ஆறு அமைச்சர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. காலியாகிறதா திராவிட கட்சிகளின் கூடாராம்? திமுகவுக்கு செல்வதை விட தவெகவுக்கு செல்வது தான் பெஸ்ட்.. மாஜிக்கள் விஜய்யை தேர்வு செய்ய இந்த ஒரு காரணம் தான்.. செங்கோட்டையன் வீசிய வலையில் சிக்கிய பெரும்புள்ளிகள் யார் யார்?

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் சமீபத்திய மற்றும் முக்கியமான நகர்வாக, முன்னாள் அதிமுக விசுவாசியும் சீனியர் தலைவருமான…

eps sengottaiyan

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் சமீபத்திய மற்றும் முக்கியமான நகர்வாக, முன்னாள் அதிமுக விசுவாசியும் சீனியர் தலைவருமான செங்கோட்டையன், கடந்த நவம்பர் 27ஆம் தேதி தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ‘என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன்’ என்று உறுதிமொழி கொடுத்தவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அதே ஜெயலலிதாவின் படத்தை தாங்கி தவெகவில் இணைந்தது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு பெரிய அரசியல் ஷாக் கொடுத்திருக்கிறது. முதல்முறையாக ஒரு சீனியர் அரசியல் தலைவர் தங்கள் வசம் வந்திருப்பதால், தவெக வட்டாரத்தில் உற்சாகம் கூடியிருக்கிறது.

தவெகவில் இணைந்த கையோடு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைய தயாராகி வருவதாகவும், இப்போது அவர்களின் பெயர்களை சொன்னால் சிக்கல் வரும் என்றும் கூறி தமிழக அரசியலில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். இந்த அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். வெளியேற தயாராக இருப்பவர்களின் பட்டியலில் மாஜி அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் என இரண்டாக பிரித்து தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தவெகவின் இந்த ‘டார்கெட் லிஸ்ட்டில்’ உள்ள முன்னாள் அமைச்சர்கள் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்தாலும், அரசியல் விமர்சகர்கள் சிலர் சில அடையாளங்களை சுட்டிக்காட்டுகின்றனர். அந்த பட்டியலில் ஓர் எழுத்து பெயரை மட்டும் கொண்டிருக்கும் புள்ளி, கட்சியில் பெரிய அளவில் வளர்ச்சியே காணாமல் அதிருப்தியில் இருக்கும் ஒரு மாஜி பெண் அமைச்சர், சமீபகாலமாக முக்கியத்துவம் குறைந்து ‘மைக்’ கைக்கு கிடைக்க பெறாத மாஜி அமைச்சர், டெல்டா பகுதியைச் சேர்ந்த முக்கிய புள்ளி, சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லங்க விவகாரத்தில் சிக்கிய ஒரு மாஜி அமைச்சர், விஜயகாந்தின் பட டைட்டிலை குறிக்கும் பெயருடைய புள்ளி மற்றும் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் ஒருவர் ஆகியோர் அடங்குவதாக கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து வெளியேற துடிக்கும் நிர்வாகிகள் சஞ்சலப்படுவதற்கு முக்கிய காரணங்களாக, அதிமுகவில் வலுவான கூட்டணி அமையாதது, மற்றும் 2021 தேர்தலின்போது ஈபிஎஸ்-ஸின் பண உதவிகள் இம்முறை கிடைக்குமா என்ற சந்தேகம் ஆகியவை உள்ளன. மேலும், அதிருப்தியாளர்கள் திமுக பக்கம் செல்ல விரும்பாததற்கு வலுவான காரணம் உள்ளது; ஏனெனில், அங்கு செந்தில் பாலாஜி, சேகர் பாபு, முத்துசாமி உட்பட பல முன்னாள் அதிமுகவினர் ஆதிக்கம் செலுத்துவதால், அங்கு தங்களது செல்வாக்கு எடுபடாது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால், தவெகவில் உள்ளவர்கள் அரசியலில் ஜூனியர்கள் என்பதால், அவர்களை எளிதில் சமாளித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம் என்றும், அங்கு செலவுக்கும் பிரச்சனை இருக்காது என்றும் அதிருப்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த தாவலால் நடிகர் விஜய்க்கும் ஒரு முக்கிய அரசியல் ஆதாயம் உள்ளது. தவெகவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தேர்தலில் செலவு செய்ய முடியாதவர்கள். அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், தேர்தல் வேலை தெரியாதது மட்டுமின்றி, நிதி பற்றாக்குறையும் ஏற்படும். ஆனால், அதிமுகவிலிருந்து வரும் சீனியர் அரசியல்வாதிகள், தேர்தல் செலவுக்கு பணத்தையும், அரசியல் அனுபவத்தையும் கொண்டு வருவார்கள். மேலும், அவர்கள் அரசியலில் மூத்தவர்கள் என்பதால், அவர்களை திமுகவினர் எளிதில் ஏமாற்ற முடியாது என்றும் விஜய் கருதுகிறார். இதனால், தவெகவுக்கு தேவையான நிதியையும் அரசியல் மூத்தவர்களையும் இந்த தாவல்கள் மூலம் பெற விஜய் திட்டமிடுகிறார்.

பனையூர் வட்டாரத்தில் அடித்து சொல்லப்படும் தகவலின்படி, வரக்கூடிய ஜனவரி மாதத்திற்குள், செங்கோட்டையன் கைவசம் உள்ள பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆறு முன்னாள் அமைச்சர்கள் கண்டிப்பாக தவெக பக்கம் தாவுவது உறுதி எனப்படுகிறது. உதாரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் மகனுக்கு சீட் வாங்கி கொடுத்தும், கட்சியினரின் ஒத்துழைப்பின்மையால் மகன் டெபாசிட் இழந்த வடசென்னை புள்ளி உட்பட பலர், சரியான தொகுதிகள் கிடைக்காதபட்சத்தில் கட்சியை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கின்றனர். இருப்பினும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செங்கோட்டையனின் பலத்தை ஊடகங்கள் தான் அதிகப்படுத்துவதாகவும், அவரை நம்பி யாரும் அங்கு போக மாட்டார்கள் என்றும், அப்படிச் செல்பவர்கள் உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அல்ல என்றும் உறுதியாக கூறி இந்தத் தாவல்கள் குறித்த தகவல்களை நிராகரித்தார்.