எனவே, 2025 ஆம் ஆண்டில் BSNL வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெறுவார்கள் என்பதால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL களத்தில் இறங்கிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
BSNL நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வந்த நிலையில், தற்போது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. அதேசமயம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வந்ததால் ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது 5ஜி சேவையை BSNL தொடங்க இருப்பதாகவும், அதன் சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகவும், 2025 ஆம் ஆண்டில் அனைத்து 4ஜி சேவைகளும் 5ஜி சேவைகளாக மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் 5ஜி சேவை கிடைக்கக் கூடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து 5ஜி சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.