அரசுப் பேருந்தினை உணவகங்களில் நிறுத்தும்போது இந்த 5 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த 5 வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.
- அரசுப் பேருந்தினை ஏதேனும் உணவகத்தின் முன் நிறுத்தினால், அந்த உணவகத்தில் கழிவறை வசதி இலவசமாக இருத்தல் வேண்டும். மேலும் பயோ கழிவறை இருத்தல் வேண்டும்.
- மேலும் உணவகங்களில் கண்காணிப்பு வசதிக்காக கேமரா வசதி செய்து இருத்தல் வேண்டும்.
- மேலும் உணவகங்களில் விற்கப்படும் பொருட்களின் விலையானது எம்.ஆர்.பியை விலையினை விட கட்டாயம் குறைவாக இருத்தல் வேண்டும்.
- உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்தல் வேண்டும்.
- மேலும் உணவகங்களில் அசைவ உணவுக்கு அனுமதி கிடையாது; சைவ உணவு மட்டுமே சமைக்கப்பட வேண்டும்.