24 வயதில் தொழிலதிபர்.. 28 வயதில் ரூ.106 கோடிக்கு நிறுவனத்தை விற்பனை செய்து ஓய்வு.. குடும்பத்துடன் மகிழ்ச்சி..!

24 வயதில் நிறுவனத்தை தொடங்கிய தொழிலதிபர் ஒருவர், 28 வயதில் அந்த நிறுவனத்தை 106 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள காலத்தில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Nathanael…

retirement

24 வயதில் நிறுவனத்தை தொடங்கிய தொழிலதிபர் ஒருவர், 28 வயதில் அந்த நிறுவனத்தை 106 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள காலத்தில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nathanael Farrelly என்ற புளோரிடா பகுதியை சேர்ந்த இளைஞர், 21 வயதில் வேலை பார்த்த நிலையில், 24 ஆம் வயதில் Revitalize என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதுவொரு நர்ஸிங் சேவை செய்யும் நிறுவனமாகும். வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே அந்த நிறுவனத்தை நடத்திய நிலையில், அந்த நிறுவனத்தின் மதிப்பு 106 கோடி ரூபாய் என்பதை உணர்ந்தார்.

இதனை அடுத்து உடனே அவர் தனது நிறுவனத்தை விற்பனை செய்து, ஏற்கனவே தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து, 119 கோடி ரூபாய் மதிப்பு உள்ள பணக்காரராக மாறினார். இதனை அடுத்து அவர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கர்ப்பமாக உள்ள தனது மனைவிக்கு ஆதரவாகவும், ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளுக்கு பொறுப்புள்ள அப்பாவாகவும் இனிவரும் நாட்களை கழிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் ஆரம்பித்த நிறுவனம், நோயாளிகளை வீட்டிலேயே சிகிச்சை அளிக்க நர்சுகளை அனுப்பும் நிறுவனம் ஆகும். கோவிட் நேரத்தில் இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய தேவை இருந்த நிலையில், அந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானது.

இதனை அடுத்து, “அந்த நிறுவனத்தை 106 கோடிக்கு வாங்க விரும்புகிறேன்” என்று ஒருவர் தெரிவித்த நிலையில், அவர் யோசிக்காமல் உடனே அந்த நிறுவனத்தை விற்று விட்டார். தனது நிறுவனம் தன்னிடம் இருப்பதைவிட ஒரு நல்ல நிறுவனத்திடம் சேர்ந்தால், இன்னும் அதிகமான நோயாளிகளுக்கு உதவி செய்ய முடியும் என்று விரும்பியதால் தான் அந்த நிறுவனத்தை விற்றதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “நான் என் குடும்பத்துடன் மேலும் கவனம் செலுத்த உள்ளேன். எனக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பது தான் முக்கியம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

106 கோடிக்கு தனது நிறுவனத்தை விற்பனை செய்த அவர், அதில் வரும் வட்டியை வைத்தே தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக காப்பாற்றிக் கொள்வேன் என்றும், நான்காவது குழந்தையை எதிர்பார்க்கும் ஒரு நல்ல தந்தையாகவும், மூன்று குழந்தைகளுக்கு அன்பான தந்தையாகவும், என் மனைவிக்கு நல்ல கணவராகவும் இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

26 வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டு, தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.