சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 221 லோன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு புறம்பாக பல கடன் செயலிகள் பொதுமக்களுக்கு கடனை தந்து, அதன் பின் 100%, 200% வட்டியை பெற்று வருவதாக புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி கடன் பெற்றவர்களின் உறவினர்களுக்கு மோசமான புகைப்படங்களுடன் கூடிய மெசேஜ் அனுப்பி கடன் பெற்றவர்களை மனரீதியில் துன்புறுத்தும் புகார் வந்தன.
லோன் செயல்களின் துன்புறுத்தல் காரணமாக பலர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏராளமான புகார்கள் காவல் நிலைய பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கையாக சட்டவிரோதமாக செயல்படும் லோன் செயலிகள் நீக்கம் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரவாத லோன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது .
அதுமட்டுமின்றி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் குறித்து அவதூறாக பதிவு செய்யப்படும் சமூக வலைதள பக்கங்கள் youtube வீடியோக்கள் நீக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்த அவதூறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.