இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டு பிறக்கவிருக்கும் நிலையில், ஜியோ நிறுவனம் புத்தாண்டு சலுகையாக ரூபாய் 2025 சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஜியோ நிறுவனம் சிறப்பு சலுகையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 2025 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் கால், தினசரி 2GB டேட்டா என்ற வகையில் மொத்தம் 500GB 4G டேட்டா வழங்கப்படும். 5G டேட்டா வசதி உள்ளவர்களுக்கு உயர்தர இன்டர்நெட் கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி உண்டு.
சிறப்பு சலுகையாக, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி AJIOவில் ரூ.2500 மதிப்பில் பர்சேஸ் செய்தால் ரூ.500 கூப்பன் கிடைக்கும். அதேபோல், ஸ்விக்கியில் ரூ.499 மதிப்பில் ஆர்டர் செய்தால் ரூ.150 சலுகை கிடைக்கும். மேலும், EaseMyTrip.com மூலம் விமான புக்கிங் செய்தால் ரூ.1500 சலுகை பெறலாம். இந்த அனைத்து சலுகைகளும் ரூ.2025 சிறப்பு ரீசார்ஜ் பிளானில் அடங்கியுள்ளன.
இந்த ரீசார்ஜ் பிளான் அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளம் மற்றும் செயலி மூலம் கிடைக்கும். 2025 ரூபாய்க்கு 200 நாட்கள் வேலிடிட்டி என்பது பயனர்களுக்கு மிகவும் நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.