சீனாவை சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் மடிக்கக்கூடிய (folding) ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலுக்கு தற்போதைக்கு “OnePlus Open 2” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த போல்டிங் போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மடிக்கக்கூடிய வடிவமைப்பாக இருந்தாலும், இதன் முக்கியமான மேம்பாடுகள் செயல்திறனில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த போனில் நான்கு கேமராக்கள் இருக்கும் என்றும், மொபைல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்றும், 64 மெகாபிக்சல் மற்றும் பெரிஸ்கோப் கேமரா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மடிக்கக்கூடிய OnePlus Open 2 மாடல் வெளியிடும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த சில வாரங்களில் இந்த போன் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த போன் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
OnePlus Open 2 என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இந்தியா உட்பட அனைத்து ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.