மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தற்போது மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறது. பா.ஜ.க கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ஊழலை ஒழிக்க கருப்புப்பணம் அனைத்தும் வெளிக் கொணரப்படும் என்று முதல் முறையாக அமைந்த ஆட்சிலேயே வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் ஊழலை ஒழிக்கும் பொருட்டும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு வைத்துள்ள கருப்புப் பணம் அனைத்தும் வெளிக் கொண்டு வரும் நோக்கிலும் இன்று நள்ளிரவு முதல் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.
இனி வாடிக்கையாளர்கள் போன் அல்லது கார்டு இல்லாமலேயே பண பரிவர்த்தனை செய்யலாம்… எப்படி தெரியுமா…?
அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதனால் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் வெளிக் கொணரப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பெட்ரோல் பங்குகள் மற்றும் வங்கிகளில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக கூட்டம் அலைமோதியது. மேலும் புதிதாக 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
இவற்றில் 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் கடந்த வருடம் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான காலஅவகாசமும் கொடுக்கப்பட்டது. அதற்கு வரைமுறையும் கொண்டுவரப்பட்டது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, இதுவரை 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றாதவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 97.96% ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள சுமார் 7,261 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.