தவறுதலாக அக்கௌண்ட்டில் ஏறிய 15 லட்சம் பணம். பிரதமர்தான் பணம் போட்டதாய் நினைத்து வீடு கட்டிய விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தைச் சார்ந்தவர் ஞானேஸ்வர் ஜெகநாத், இவரின் வங்கிக் கணக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென 15 லட்சம் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. திடீரென இவ்வளவு பணம் நமது அக்கௌண்ட்டிலா என்று…

Untitled 55

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தைச் சார்ந்தவர் ஞானேஸ்வர் ஜெகநாத், இவரின் வங்கிக் கணக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென 15 லட்சம் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.

திடீரென இவ்வளவு பணம் நமது அக்கௌண்ட்டிலா என்று சந்தேகப்பட்ட விவசாயில் பிரதமர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி 15 லட்சம் ரூபாய் பணத்தினை அக்கௌண்ட்டில் போட்டுள்ளார் போல் என்று எண்ணிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த 15 லட்சத்தினை தன் குடும்பத்தில் உள்ளோருக்கு செலவு செய்துள்ளார்.

மேலும் அவர் வீடு கட்ட நினைத்திருந்த நிலையில் தன் கணக்கில் இருந்து 9 லட்சம் பணத்தை எடுத்து அதை வீடு கட்டப் பயன்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர் மீதமுள்ள பணத்தினை சேமிப்பாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டாராம்.

இந்தநிலையில் வங்கித் தரப்பில் இருந்து திடீரென பணம் தவறுதலாக அக்கௌண்ட்டில் போடப்பட்டதாகவும், அதனால் பணத்தினை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸைப் பார்த்த விவசாயி ஷாக்காகி, பிரதமர் பணத்தைக் கொடுக்கவில்லையா? என்று புலம்பியவாறே மீதம் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 6 லட்சம் பணத்தை எடுத்து வங்கியிடம் ஒப்படைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன