தென் ஆப்பிரிக்காவின் மிட்செல்ஸ் ப்ளைன் பகுதியில் 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 12 வயது சிறுவர். ஆனால் தற்போது இந்த வழக்கு திடீரன வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள Kapteinsklip என்ற பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில், ஒரு மைதானத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி முதன்முதலில் பேசியபோது இந்த செய்தி அந்நாட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியானது.
3 சிறுவர்கள் துப்பாக்கியை காட்டி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ பின்னர் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு, அந்த வீடியோவை கண்ட ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, 12, 14, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் ஆபாசப் படம் தயாரித்தல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இந்த வழக்கின் விசாரணையின்போது இந்த வழக்கை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்தச் சிறுமியின் பாட்டி, “வழக்கு வாபஸ் பெறப்பட்டதை நீதிமன்றமோ, அதிகாரிகளோ என்னிடம் தெரிவிக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ‘என்ன நடந்தது, ஏன் இந்த வழக்கு விசாரணை நடைபெறாமல் உள்ளது’ என்று கேட்டேன். ஆனால் எனக்கு யாரிடம் இருந்தும் சரியான பதில் இல்லை என்று கூறினார்.
இந்த வழக்கு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. இந்த வழக்கு தேவையற்ற தாமதங்களை சந்திக்காதபடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இந்த வழக்கை தாமதப்படுத்தாமல், இதற்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
