AI படித்த 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் நிறுவனத்தில் உயர் பதவி.. ஆச்சரிய தகவல்..!

By Bala Siva

Published:

AI டெக்னாலஜி படித்த 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியை அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைரான் குவாசி. இவர் சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலித்தனம் இருந்ததால் 11 வயதிலேயே கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அவரது கல்வி சாதனைகளுக்காக பல்கலைக்கழக நிர்வாகமே பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களை கொடுத்துள்ளது.

இதனை அடுத்து அந்த சிறுவன் AI ஆராய்ச்சி கூட்டுறவு சக ஊழியர் ஆகவும் பிளாக்பர்ட் நிறுவனத்தில் இயந்திர கற்றல் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவரை பொறியாளராக பணி அமர்த்தியுள்ளது.

அசோசியேட் ஆப் சயின்ஸ் என்ற பட்டம் பெற்ற குவாசி, AI டெக்னாலஜி குறித்த படிப்பையும் படித்து உள்ளதை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குவாசி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் விண்வெளியை ஆராய்வதற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் பணி அமைக்கப்பட்டுள்ளார் என்பதும் மனித குலத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற அவர் பங்களிப்பார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது குறித்து குவாசி கூறியபோது, ‘ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சேரவும், ஸ்டார்லிங்க் குழுவில் பணியாற்றவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்பொழுதும் விண்வெளியில் ஆர்வமாக உள்ளேன், மேலும் மனிதகுலத்தை பல்கிரகமாக்குவதற்கு எனது திறமைகளைப் பயன்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ எலோன் மஸ்க் எனக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். கண்டிப்பாக இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நான் கடினமாக பாடுபடுவேன்’ என்று குவாசி தெரிவித்துள்ளார்.

குவாசியின் பணியமர்த்தல் அவரது திறமைக்கும் கடின உழைப்புக்கும் சான்று என்பது மட்டுமின்றி விண்வெளியில் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.