இனி வாயில சொல்ல முடியாது.. செஞ்சு காட்டிற வேண்டியதுதான்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் அபராதம்!

By Gayathri A

Published:

ஆதார்டு கார்டு என்பது இந்தியர்களின் கட்டாய அடையாளச் சான்று என்றாகி விட்டது. அதிலும் மத்திய அரசு ஆதார்டு கார்டுடன் பேன் கார்டினை இணைப்பதை கட்டாயமாக்கி அதற்கான அரசாணயினையும் சில வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டது.

பல முறை கெடு விதித்தும் மக்கள் அரசாணையைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இன்னும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக் கெடுவை பலமுறை நீட்டித்து உள்ளது.

மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயல் இழக்கும் என்றும், அதன்பின்னர் அந்த கார்டைப் பயன்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

தற்போது கடைசி காலக் கெடுவாக பான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவினை மார்ச் 31 ஆம் தேதி வரையாக நீட்டித்து, குறிப்பிட்ட தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10000 அபராதம் என்று அறிவித்துள்ளது.

என்னது ரூ.10000 அபராதமா? என மக்கள் விரைந்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அபராதம் குறித்த அறிவிப்பு வெளியான இந்த இரண்டு நாட்களில் மட்டுமே பல ஆயிரக் கணக்கானோர் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிக்கை கூறுகின்றது.

 

Leave a Comment