கனவாக இருந்த அமெரிக்கா கானல் நீராக மாறும் பரிதாபம்.. இனி வாழ்வதற்கு ஏற்ற நாடு இல்லை.. அமெரிக்காவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டினர்.. 10 நகரங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி..!

அமெரிக்காவில் பல நகரங்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் எதிர்காலத்தில் அமெரிக்கா வாழ தகுதியில்லாத ஒரு நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர்…

america 1

அமெரிக்காவில் பல நகரங்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் எதிர்காலத்தில் அமெரிக்கா வாழ தகுதியில்லாத ஒரு நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப திட்டுமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்கா என்பது பலரின் கனவாக இருந்த நிலையில் தற்போது கானல் நீராக பரிதாபமாக மாறியுள்ளது.

அதிபர் டிரம்பின் தவறாக வர்த்தக, வெளிநாட்டு கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நகரங்கள் குறித்த பட்டியலை ஒரு கருத்துக்கணிப்பு வரிசைப்படுத்தியுள்ளது. அந்த 10 நகரங்கள் இதோ:

10. ஃபீனிக்ஸ், அரிசோனா:

அதிகாரப்பூர்வ பணவீக்கம் குறைந்திருந்தாலும், 2021 ஆம் ஆண்டு முதல் வாடகை விலைகள் 20%க்கும் மேல் அதிகரித்துள்ளன. கட்டுமானம் மற்றும் சேவை துறைகளில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.

9. நியூயார்க் நகரம் :

மன்ஹாட்டனில் சராசரி மாத வாடகை $4,000-க்கும் அதிகமாக உள்ளது. குயின்ஸ் மற்றும் புரூக்லினில் வாடகை 20-30% உயர்ந்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டதால், வேலையின்மை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

8. ஃபிலடெல்பியா :

இங்கு வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தொலைதூர வேலை முறை அதிகரித்ததால், பல வணிகங்கள் மூடப்பட்டு, வேலையின்மை அதிகரித்துள்ளது. நகராட்சி வரிகள் குறைந்ததால், மருத்துவமனைகள் மற்றும் நூலகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

7. போர்ட்லேண்ட், ஓரிகான்:

அலுவலகங்களில் காலியிடங்களின் விகிதம் 23%க்கும் அதிகமாக உள்ளது. முக்கிய நகரங்களில் வேலையின்மை இங்குதான் வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பல குடும்பங்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றன.

6. வாஷிங்டன், டி.சி. :

அலுவலகங்களில் காலியிடங்களின் விகிதம் 22%ஐ தாண்டியுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் குறைப்பு மற்றும் ஹைப்ரிட் வேலை முறையால், அரசாங்கத்தை நம்பியுள்ள இந்த நகரத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

5. டென்வர், கொலராடோ :

நகரின் மையப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் 37% இடங்கள் காலியாக உள்ளன. அதிகப்படியான விரைவான வளர்ச்சி, கோவிட்-19 மற்றும் ஹைப்ரிட் வேலை முறை காரணமாக, நகரின் மையப்பகுதி “கைவிடப்பட்ட வாகன நிறுத்துமிடமாக” மாறியுள்ளது.

4. சிகாகோ, இல்லினாய்ஸ் :

ஒரு காலத்தில் அமெரிக்காவின் “தொழிற்சாலை” என்று அறியப்பட்ட சிகாகோ, இப்போது அதன் உற்பத்தி, நிதி மற்றும் போக்குவரத்துத் தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

3. சியாட்டில், வாஷிங்டன் :

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்பட்ட பணிநீக்கங்கள் காரணமாக, நகரின் மையப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் 35% காலியாக உள்ளன. தொழில்நுட்ப ஊழியர்களை நம்பியிருந்த சிறு வணிகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

2. லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா:

இங்கு வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. உள்ளூர் பணவீக்கம் 3%க்கும் அதிகமாகவே உள்ளது. ஒருபுறம் சில பகுதிகள் செழிப்பாக இருந்தாலும், மறுபுறம் பல சிறிய கடைகள் மூடப்பட்டுள்ளன.

1. சான் பிரான்சிஸ்கோ:

நகரத்தின் மையப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் 34%க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. தொழில்நுட்ப துறையை அதிகப்படியாக நம்பியிருந்தது, அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வீடற்றவர்கள் பிரச்சனை ஆகியவை இந்த நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக கூறப்படுகின்றன.

மேற்கண்ட 10 நகரங்கள் ஒரு ஆரம்ப உதாரணம் மட்டுமே என்றும், புறநகர் பகுதிகள் அமெரிக்காவின் புதிய பொருளாதார நெருக்கடியாக மாறக்கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.