தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?

By Gayathri A

Published:

கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் உலகின் மிக வளர்ந்த நாடுகளும் பெரும் பொருளாதார மந்தத்தினை சந்தித்தன.

அந்தவகையில் இலங்கை நாடு பொருளாதார மந்தத்தினை சந்தித்துள்ளது. அந்நியச் செலவாணியின் விலை குறைந்து போக சீனா, இந்தியா என ஒவ்வொரு நாடுகளிடம் கடனை வாங்கிக் குவித்து வருகின்றது.

இந்திய அரசு 7500 கோடி கடனாக இலங்கை அரசுக்கு கொடுத்த நிலையிலும் இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களான எரிபொருளில் துவங்கி உணவுப் பொருட்கள் என அனைத்தையும் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

நிலைமை நாளுக்கு நாள் மோசமானதை அடுத்து இந்தியாவின் மத்திய அமைச்சரான ஜெய் சங்கருடன் இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜ பக்சே ஆகியோர் பேசியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ரூ.7,600 கோடி கடனைக் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 7500 கோடி கொடுத்துள்ள நிலையில் மீண்டும் 7600 கோடி கடன் குறித்து இந்திய அரசு அமைச்சர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

 

 

 

Leave a Comment