அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் பல அதிரடி அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.. குறிப்பாக அவர் இரண்டு விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.. அதில் ஒன்று உலக நாடுகளுக்கு வரி விதிப்பது.. மற்றொன்று சீனா, இந்தியா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட நாடுகளில் நடக்கும் போர்களை நிறுத்துகிறேன் என மத்தியஸ்தம் செய்வது..
‘அதைசெய்து நான் பல நாடுகளின் போர்களை நிறுத்தி இருக்கிறேன்.. எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்’ எனவும் சொல்லி வருகிறார்.. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரையும் நான்தான் நிறுத்டினேன் என தம்மட்டம் அடித்து வருகிறார்.. ஒருபக்கம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு அதிக வரிகளை விதிப்பேன் என மிரட்டினார்.
சொன்னபடியே இந்தியாவுக்கு 25 சதவீத வரியை உயர்த்தியதோடு கூடுதல் வழியாக 25 சதவீத வரி விதித்தார். அதன்பின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து அந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதோடு இனிமேல் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது எனவும் டிரம்ப் கூறினார்..
இந்தியாவுக்கு மட்டுமல்ல.. சீனாவுக்கும் அதிக அளவிலான வரிகளை தொடர்ந்து விதித்து வருகிறார். இந்நிலையில், டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட வேண்டிய வரியை அவர் தன்னிச்சையாக செய்தது தவறு’ என அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது..
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள டிரம்ப் புதிய வழிகளில் வரிகளை விதிக்க திட்டம் தீட்டி வருகிறார்.. இந்த தீர்ப்பு வந்தவுடனேயே சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்..

