ஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?!

By Staff

Published:


fbe484abe20ab9471a68d1d6c2b94009

அமாவாசை என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றது. அமாவாசைதோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் மூதாதையர்களை வழிபடவேண்டிய நாளாகும். அந்நாளில் கேளிக்கை, விருந்துன்னு நேரம் போக்கக்கூடாதென்பதற்காகத்தான் சுபநிகழ்ச்சி செய்வதை தவிர்க்க சொல்கிறார்கள்.

Leave a Comment