வீட்டின் நுழைவு வாயிலில் அங்கு மங்கலப் பொருள்களை வைப்பது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்றால் வீட்டிற்கு வரக்கூடியவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். அவற்றில் அஷ்டமங்கள பொருள்கள் உண்டு.
அவற்றில் ஒன்று தான் கண்ணாடி. கோவில்களிலும், வீடுகளிலும் இந்தக் கண்ணாடி ரொம்பவே சிறப்பானது. கோவில்களில் நீங்கள் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு முறையும் அபிஷேக ஆராதனை முடிஞ்சி தீபாராதனை நடக்கும்போது இறைவனுக்கு சாமரம் வீசி மங்களப்பொருள்களைக் காட்டும்போது கண்ணாடி காட்டுகின்ற வழக்கம் உண்டு.
பூஜையிலேயே இறைவனுக்குக் காட்டக்கூடியது இந்தக் கண்ணாடி. வீட்டில் நாம் முகம் பார்க்க பயன்படுத்தும் கண்ணாடி தனி விஷயம். வீட்டிற்குள்ளே நுழையும்போது வாசலில் பெரிய நிலைக்கண்ணாடி வைத்து இருப்பார்கள். எதனால் இது நல்லது என்றால் வீட்டிற்குள் ஒருவர் வரும்போது அவர் பார்வையில் மங்களப்பொருள்கள் பட வேண்டும் என்பதால் தான் இதை வைக்கிறார்கள்.
வாழை மரம், தோரணங்கள் கட்டலாம். உப்பு, மஞ்சள், எலுமிச்சம்பழம் கட்டலாம். இதன் முக்கிய நோக்கம் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது வீட்டிற்குள் வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தாலும் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் வர வேண்டும் என்பதற்காகத் தான் நிலைக்கண்ணாடியை வைக்கிறார்கள்.
நாமே கடன் வாங்கித் தான் வீடு கட்டியிருக்கோம். வீட்டிற்குள் வருபவர்கள் என்ன நினைப்பாங்க…எவ்ளோ பெரிய வீடு…என்னா பெரிய ஷோக்காக் கட்டியிருக்கான்…எங்கே இருந்து தான் இவனுக்கு மட்டும் பணம் வருதோ….தெரியலப்பான்னு ….நம்மைப் பற்றி பொறாமை எண்ணம் கொண்டவர்களுக்கு கண்ணாடியைப் பார்க்கும் போது அவர்களையே அறியாமல் அந்த எண்ணங்கள் அகன்று விடும்.
இதன் சக்தி அவ்வளவு பெரியது. ஆனால் பார்ப்பதற்கு இதுவும் ஒரு ஷோகேஸ்க்காகவும் ஆடம்பரத்திற்காகவும் வைத்துள்ளார்கள் போல என நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையான விஷயம் இதுதான்.
அதனால் வாய்ப்பு உள்ள அனைவருமே இந்த நிலைக்கண்ணாடியை வீட்டிற்குள் நுழைந்ததும் தெரியும் வகையில் சுவர்களில் மாட்டுங்க. உங்களுக்கான கண்திருஷ்டி போகவும் இது உகந்தது. எங்களால இதை மாட்ட வசதியில்லை என்று எண்ணுபவர்கள் அட்லீஸ்ட் ஒரு பிள்ளையார் படத்தையாவது வாங்கி மாட்டுங்க.