வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்ப, இவற்றில் கவனம் செலுத்துங்கள்…

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியால் உலகமே திளைத்திருந்தாலும் முன்னோர் வகுத்து சென்ற சில விசயங்களில் நாம் கவனம் செலுத்தினால் வீட்டின் மகிழ்ச்சி கூடும். வீடு கட்டும்போதும், வீட்டின் பொருட்களை வாஸ்துப்படி அமைத்தால் அதில் ஒன்று. வாஸ்து…

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியால் உலகமே திளைத்திருந்தாலும் முன்னோர் வகுத்து சென்ற சில விசயங்களில் நாம் கவனம் செலுத்தினால் வீட்டின் மகிழ்ச்சி கூடும். வீடு கட்டும்போதும், வீட்டின் பொருட்களை வாஸ்துப்படி அமைத்தால் அதில் ஒன்று. வாஸ்து மட்டுமே வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொண்டு வராது. தினசரி நம் வாழ்வில் சில விசயங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். சிலது விஞ்ஞானரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளாது..

தினசரி வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்களை கவனிப்போம்…

வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. சிறு பாய் அல்லது எதாவது விரிப்பின்மீது அமர்ந்தே சாப்பிடவேண்டும். டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும். சாப்பிடும்போது கால்நீட்டி சாப்பிடுவதும், இடது கையினை தரையில் ஊன்றியும் சாப்பிடுவதும் கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் , நெல்லிக்காய், அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்குமேல் சாப்பிடக்கூடாது. நகம் , முடி விழுந்த உணவினை சாப்பிடக்கூடாது.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முடி, நகம் வெட்டுதல் கூடாது. வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் அமோகமாக நடக்கும். வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க செல்வம் வந்து சேரும். தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.

மயில் தோகையை வீட்டில் வைக்க எதிர்மறையான எண்ணங்களை தடுக்கும். வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்ககூடாது. பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது. வீட்டில் மாலையில் விளக்கேற்றிய பிறகு, பால், தயிர், ஊசி, எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை பிறருக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.

இப்படி சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் வந்து சேரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன