ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தாலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் என முக்கிய ஐந்து அம்சங்களை முக்கியமாய் கொண்டது. பஞ்சாங்கம் படித்தலை கேட்கும்போது யோகம் ரோகத்தை போக்கும். திதி நன்மையை அதிகரிக்கும், கரணம் வெற்றியை தரும். வாரம் ஆயுளை தரும். நட்சத்திரம் பாவத்தை போக்கும். முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் தமிழ் வருடப்பிறப்பன்று வீட்டில் பஞ்சாங்கத்தினை படைத்து, பின்பு பஞ்சாங்கத்தை பார்த்து நல்லது கெட்டது, மழை, வெயில் பற்றி வீட்டின் மூத்தவர் படித்து காட்டுவார்கள். ஊர் பஞ்சாயத்து, கோவில்களிலும் பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போனது..