ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி.. விழுந்தபோதெல்லாம் எழுந்தான். பல மடங்கு சக்தியுடன் என்பது மிகப்பெரிய வெற்றி. வான் அளவு லட்சியம் , கடல் அளவு நம்பிக்கை , மலை அளவு முயற்சி உன்னிடம் இருந்தால், விண்ணைத் தாண்டி தேடி வரும் வெற்றி.
வாழ்க்கையில் பிரச்சினை வந்தா தூக்கி ஒரு ஓரமா போடுங்கள், அதுவே சரியாயிடும். எப்படி என்றால் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கி பாருங்கள்.அது எவ்வளவு வெயிட் இருக்கும் 100 கிராம், 50 கிராம் என்று இருக்குமா, அதை அப்படியே நீங்கள் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும். ஒண்ணுமே ஆகாது. ஆனா ஒரு மணி நேரம் அப்படியே பிடிச்சிக்கிட்டே இருந்திங்கனா, உங்க கை வலிக்கும் ஒருநாள் முழுக்க அப்படியே வெச்சிருந்திங்கனா, உங்க கை அப்படியே மரத்துடும்.
ஒரு மணி நேரத்துலே உங்க கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு அந்த டம்ப்ளரோட வெயிட் கூடிக் கிட்டே போகுமா என்ன. இல்லை அல்லவா. உங்க கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும். கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் இந்தக் கிளாஸ் தான் பிரச்சினை.
அது போல் தான் ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனால உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்ததுன்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம். வலி இல்லாத வாழ்க்கை இல்லை, வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை.
வலிகளை கடந்து வாழ்க்கையை தேடுவோம். இருந்தால் உறவு, பிரிந்தால் நினைவு இதுதான் வாழ்க்கை. தேவையில்லாத பயம், வாழ்நாளில் பாதி காலத்தை வீணாக்கும். மனிதன் மிகவும் சுய நலக்காரன். நேசித்தால் கெட்டதைப் பார்க்க மாட்டான். வெறுத்தால் நல்லதைப் பார்க்க மாட்டான்.
எதிர் பார்க்காமல் பழகினால், எல்லோரையும் பிடிக்கும். ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும் போது, வெற்றி பெறுகிறார். மன நிம்மதியின் மாளிகை, தனிமையே. எப்போதும் சுலபமானதை செய்வதை விட, சரியானதை செய்வதே சரியானது. ஏமாற்றுதலையும் நயவஞ்சகத்தையும் ‘சாதுர்யம்’ என்கிறார்கள், நேர்மையையும் நியாயத்தையும் ‘ஏமாளித்தனம்’ என்கிறார்கள்.
வாழ்க்கை என்னும் புத்தகத்தில் முடிவுரைக்கு வந்த பிறகு தான் முன்னுரையே புரிகிறது. திரும்ப வாசிக்கத்தான் எந்த வாய்ப்பும் வழங்கப்படுவ தில்லை, மாறிப்போவதும், கடந்துபோவதும் பின் பழகிப்போவதும் தான் வாழ்க்கை. புத்தகம் என்பது உற்ற துணைவன், ஒப்பற்ற ஆசான், உயர்ந்த வழிகாட்டி, உயிரினும் மேலான உறவு என்றார் ஆபிரகாம் லிங்கன்.
காலங்கள் மாறுவதில்லை. மாறுவது மனித மனமே. வாழ்க்கைல பேராசைக்கும், லட்சியத்திற்கும்,
வித்தியாசமென்பது, மிகக்குறைவு தான், உழைப்பு இல்லாத, கனவுக்கு பெயர் பேராசை… உழைப்புடன் கூடிய, கனவுக்கு பெயர் லட்சியம். வாழ்க்கையில் சவால்களை சமாளிப்பதற்கான ஒரு சிறந்த வழி,
அன்றாட வாழ்க்கை மற்றும் இயக்கங்களுக்காகப் பிறரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுதான்.
சரியான வழிமுறைகளையும், தன்னம்பிக்கை யையும் பின்பற்றுவதன் மூலம், தைரியம் மற்றும் நம்பிக்கை கொண்டு, நேர்நிலை சிந்தனையோடு செயல்பட்டால் வாழ்க்கை வளமாகும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



