சுமலிங்களுக்கு இப்படிதான் தாம்பூலம் கொடுக்கவேண்டும்…

By Staff

Published:


751779665c070bc4646d23c6800c2ae7

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பவது தமிழ்கர்களின் வழக்கம். வெற்றிலை, பாக்கு, பழம், இல்லாவிட்டாலும் கொஞ்சம் பூவும், நெற்றியில் இட்டுக்கொள்ள குங்குமமாவது கொடுத்தனுப்ப வேண்டும். இவ்வாறு தாம்பூலம் கொடுக்கவும், வாங்கவும் சில வரைமுறை உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்..

தாம்பூலம் கொடுக்கும், வாங்கும் பெண்களில்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி.. ஆகிய மூன்று தேவியராய் இருவரும் இருக்கின்றனர்.  வீட்டுக்கு வரும் முப்பெருந்தேவியரை சிறப்பிக்கும் விதமாய் வெற்றிலை பாக்கு, மட்டையோடு கூடிய தேங்காய், வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு , ஜாக்கெட் பிட் என அவரவர் வசதிப்படி கொடுக்கலாம்.

மட்டை தேங்காயில் மஞ்சள் தடவி, குங்குமம் இட்டு பூச்சுற்றி இரு கைகளால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் தாம்பூலத்தை மடியேந்தி வாங்கவேண்டும்.

caf48f0bada86a3d9bf2abe90aee39af

அப்படி மட்டையோடு கூடிய தேங்காயை கொடுப்பதற்கும் ஒரு அர்த்தம் உண்டு. பெண்கள் அனைவரும் ஆணவம், மாயை, வன்மம் ஆகியவற்றை நீக்க வேண்டும். ஆணவத்தினை தேங்காய் மட்டையோடும், மாயையை தேங்காய் நாரோடும், வன்மத்தினை தேங்காய் ஓடாகவும் உருவகப்படுத்தி இம்மூன்றையும் நீக்கினால்தான் வெண்மையான, சுவையான தேங்காய் கிடைக்கும். ஆணவம், மாயை, வன்மத்தினை அகற்றி.அனைவரையும் அனுசரித்து போனால்தான் இனிமையான இல்லறம் கிடைக்கும் என்பதே மட்டை தேங்காயின் ரகசியம்.

தாம்பூலம் கொடுக்கும், வாங்கும் சுமங்கலிகளிடம் மூன்று தேவியரும் வாசம் செய்வதால் நாம் நினைக்கும் காரியங்களை, வரங்களை தேவியர் மூவரும் தங்கு தடையின்றி நமக்கு அருள்கின்றன. இப்படி தாம்பூலத்தை கொடுப்பதிலும், வாங்குவதிலும் நன்மை ஏற்படும். அதனால் வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். யாராவது தாம்பூலம் கொடுத்தால், பகை, பொறாமை உணர்ச்சி இன்றி மனப்பூர்வமாக கொடுப்பவரை வாழ்த்தி மடியேந்தி வாங்குங்கள். இருவருக்கும் நன்மை கிடைக்கட்டும். வாழ்வில் வளம் பெறட்டும்..

Leave a Comment