திருமணம் மாதிரியான சுபவிஷேசங்களிலும், யாகம், கும்பாபிஷேகம் என ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அட்சதை நிச்சயம் இடம்பெறும். அரிசி உயிர்வாழ அவசியம். முனை முறியாத அரிசிதான் அட்சதை, மங்களத்தின் அடையாளம் மஞ்சள். இரண்டும் கலக்க ஒரு ஊடகம் தேவை. பசு நெய் கோமாதாவின் திரவியம். பூமிக்குமேல் விளையும் அரிசி, பூமிக்கு கீழ் விளையும் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
அரிசி எனப்படும் மணமகனும், மஞ்சள் எனப்படும் மணமகளும் வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்து, வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள், இவர்கள் ஒருமித்து வாழ மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனஇருக்கின்றனர் என சொல்லாமல் சொல்வதே அட்சதையின் தத்துவம். அதனால்தான், உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும். மொத்தாமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை வழங்குவதில்லை. புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹாலக்ஷ்மி பரிபூரண சக்திக்கொண்ட நெய்யினை கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.
இந்த அமைப்பில் அமையும் திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும் என்பது உறுதி. இதுவே அட்சதையின் தாத்பரியம்