நம் உடம்பில் எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டிருக்கு. எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாவே மூளைக்கு செல்லும். அதனால், நெற்றிப் பகுதி அதிக சூட்டோடு இருக்கும்.
நம் அடிவயித்துலயும் நெருப்பு சக்தியிருக்கு. ஆனா, அந்த சூட்டின் தாக்கம் அதிகமா உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனாலதான் காய்ச்சல்ன்னா நெற்றியில் கைவைச்சு பார்த்து சூட்டை தெரிஞ்சுக்குறோம்.
வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைச்சு எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பின் வேலை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலைமேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணியெல்லாம் என்னதான் துண்டினால் துடைத்தாலும் முற்றிலுமாய் காயாமல் கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிடும். இதனால தலைவலி, தூக்கமின்மைலாம் வரும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேத்ததான் விபூதி வைக்குறதோட நோக்கம்.
நெற்றிப்பகுதி அதிகமா சூடாவதால கிருமித் தொற்று ஏற்படும். கிருமித் தொற்றைத் மஞ்சள் தடுக்கும். அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதனாலதான் விபூதி, சந்தனம், குங்குமம், வைக்கும் பழக்கம் உண்டானது.