கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையில் தெளிப்பது ஏன்?!

By Staff

Published:


வீடுகளில் பூஜைகளின்போதும், கோவில் யாகங்கள், கும்பாபிஷேகங்களின்போது கும்பம் வைப்பதை பார்த்திருப்பீங்க. அந்த கும்பத்திலிருக்கும் புனித நீரை வெறுங்கையால் தெளிக்காம மாவிலைக்கொண்டு தெளிப்பாங்க. அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி கிடைக்காத காரணத்தால் முருகன் பழனியில் ஆண்டி அவதாரம் பூண்டார் என்று புராணமும் கூறுகின்றது..மாம்பழம் என்பது ஞானத்தை அடையாளம்..இந்த ஞானத்தின் ஒருதுளி நீர் பட்டால்கூட ஜென்ம ஜென்மாந்திரமான பாவங்கள் விலகிவிடும். இதனால்தான் இந்த ஞானம் பெற்று சத்கதி அடைந்த 33 கோடி தேவர்களும் கங்கை நீருடன் இணைந்து கலசத்தில் உள்ளார்கள் என்பது ஐதீகம் . புனித நீரை மாவிலையில் தெளிப்பதற்கு காரணம் கலியுக இறுதியில் சிவபெருமானின் “உன்னை ஆன்மாவாக புரிந்து உன் தந்தை பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்”என்ற ஒரு துளி ஞானத்தின் மூலம் அனைத்து பாவங்களும் அழிந்துவிடுகின்றது!!! எல்லா நாளிலும் மாங்கனி கிடைக்காது. அதனால் மாவிலை வைக்கும் வழக்கம் உண்டானது.

அதுமட்டுமில்லாம, மாவிலை மட்டுமே அழுகாத தன்மையுடையது. மாவிலை காய்ந்து, சருகாகி மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகுமே தவிர அழுகி அற்பாயுசில் போகாது. அதுமாதிரியே மனிதவாழ்வு அமையனும்ன்னு பொருள்படவே கும்பத்திலிருக்கும் புனித நீரை மாவிலையால் தெளிப்பது வழக்காமாயிற்று.

Leave a Comment