நம் எல்லோருக்கும் எல்லா நாட்களும் ஒரே போல் இருப்பதில்லை. ஒரு சில நாள் நமக்கு பிரஷ்ஷாக இருக்கும் ஒரு சில நாள் டல்லாக இருக்கும். சில நாள் பிரச்சனைகளோடு ஆரம்பிக்கும். சில நாட்கள் கவலையோடு ஆரம்பிக்கும். ஆனால் எல்லா நாட்களையுமே Positive வாக கொண்டு செல்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டால் எல்லா நாட்களும் நமக்கு நல்ல நாட்கள் தான். அதை பற்றி இனி காண்போம்.
ஒவ்வொரு நாளும் நமக்கென்று ரொட்டீனாக ஒரு சில வேலைகள் இருக்கும். அது தவிர இதர வேலைகளும் இருக்கும். முந்தைய நாள் இரவு தூங்க செல்லும் போதே நாளை இது எல்லாம் என்னுடைய வேலைகள் என்று முதலில் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு நாம் ஒரு நாளை ஆரம்பிக்கும்போது டென்ஷன் இல்லாமல் ஈசியாக Positive வாக அந்த நாளை நம்மால் கொண்டு செல்ல முடியும்.
எந்தவித பிரச்சனைகளோ கவலைகளோ டென்ஷனா உங்களுக்கு ஏற்படும் போது இதுவும் கடந்து போகும் இது நிரந்தரமல்ல என்ற மந்திரத்தை உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள். எந்த பிரச்சினையானாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொண்டிருந்தால் உங்களுக்கு எல்லா நாட்களும் Positive வாக இருக்கும்.
பிரச்சனைகள் கவலைகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதை நினைத்து அப்படியே சோர்ந்து உட்கார்ந்து விடாமல் அந்த எண்ணங்கள் நம்மளை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க உங்களுடைய அன்றாட பணிகளை செய்யுங்கள். அப்படி நீங்கள் மற்ற பணிகளை மேற்கொள்ளும் போது உங்களுக்கு இருக்கும் கவலைகள் மற்றும் டென்சனின் பாரம் சற்று குறையும். இதுபோல ஒரு சில விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களுக்கு எல்லா நாட்களுமே Positive வாக இருக்கும்.