உஷார்…உஷார்..! உடல் சூடு தான் எல்லா நோய்களுக்கும் காரணம்…! இப்போதே இதை செய்ய ஆரம்பிங்க…!

By Sankar Velu

Published:

எல்லா நோய்களுக்குப் பின்புலமாக இருப்பது எது என்றால் அது உடல் சூடாகத் தான் இருக்கிறது. முகத்தில் பிம்பிள்ஸ், உடலில் வேனற்கட்டிகள், கொப்புளங்கள் என்று நம்மை பாடாய் படுத்தி விடும் இந்த உடல் சூடு. இதிலிருந்து மீள…

உடல் சூட்டைத் தணிக்க  எளிய வழிகள்…

நைட் வேலை செய்தாலே உடல் சூடாகத் தான் இருக்கும். ஏனென்றால் அந்த நேரங்களில் தான் உடலில் சில உறுப்புகள் ஓய்வு எடுக்கும்.

காலையில் தினமும் பிரணாயாமம் கண்டிப்பாக செய்ய வேண்டும். வெந்தயத் தண்ணீர், இளநீர், மோர், நுங்கு சாப்பிடலாம். இதெல்லாம் சாப்பிட்டால் கூட தினமும் 15 முதல் 20 நிமிடம் பிராணாயாமம் செய்தால் கண்டிப்பாக உடல் சூடு குறையும்.

உடல் சூட்டைக் குறைத்தாலே இணைப்பு மூட்டுகளில் வலி குறையும். சீதலிங் என்றால் நாக்கை ரோல் பண்ணி மூச்சை உள்ளிழுக்கும் பயிற்சி. இதை முறைப்படி தினமும் செய்தாலும் போதும்.

உடல் ரொம்ப சூடானால் கண் எரிச்சல் வரும். அடி வயிறு பிடித்து வலிக்கும். தோலில் எரிச்சல் வரும். ரொம்ப களைப்பாகவே இருக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுந்தாலே உடலில் எங்காவது பிடித்துக் கொள்ளும்.

body heat drinks water
drinks water

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் உடல் சூட்டைத் தணிப்பதற்காகத் தான் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்து பாராயணம், மந்திரம் உச்சரிக்கின்றனர். ஐஸ் கட்டி போட்டு நாம் கூல் டிரிங்ஸ் குடிக்கிறோம். இது ரொம்ப சூடு.தினமும் காலையில் எழுந்ததும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதுவே உடல் சூட்டைத் தணிக்கும் எளிய வழி தான்.

கோடைகாலத்தில் பதனீர், நுங்கு சர்பத் உடலுக்கு ஆரோக்கியம். இதனால் தான் இயற்கையே நம் உடலின் நிலைக்கேற்ப அந்தந்த காலகட்டத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப நமக்கு இயற்கையான பழங்களையும் காய்கறிகளையும் தருகிறது.

pathaneer
pathaneer

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தாலே நமக்கு நோய்களில் இருந்து பூரண விடுதலை கிடைக்கிறது. நவீன காலத்திற்கேற்ப நாம் மாறினாலும் இடையிடையே இதுபோன்ற சிறிய சிறிய பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தால் மட்டுமே நாம் நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

அதே போல் ஏசி போட்டு ஹாயாக அறையில் ஓய்வு எடுக்கிறோம். இதுவும் சூடு தான். அறையின் உள்ளே உள்ள காற்றை மட்டுமே ஏசியானது குளிர் பண்ணி தருகிறது.

AC

மீண்டும் மீண்டும் இதே போல் செய்வதால் நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகமாகி மீண்டும் மீண்டும் உடல் சூடாகத் தான் ஆகிறது. பருவகாலத்திற்கேற்ப நாம் பழங்கள் சாப்பிட வேண்டும். இதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் எளிய வழி தான். உதாரணமாக மாம்பழம், தர்பூசணி, பப்பாளி பழங்களைக் கூறலாம். இதை சரியாகக் கடைபிடித்தால் சீரணக்கோளாறு நீங்கும்.

வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். சிக்கன் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மட்டும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

Leave a Comment