நாம் அனுமதிக்காமல் இன்னொருவரால் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. இன்பமோ, துன்பமோ நாம் அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைத் துன்படுத்துவதோ, உதாசீனப்படுத்திப் பேசுவதோ, கேவலப்படுத்துறதோ, அவமானப்படுத்திப் பேசுவதோ நாம் இடம் கொடுத்தால் மட்டுமே அவை நம்மை பாதிக்கக்கூடியவையாக மாறுகிறது. இதை நாம எப்படி சமாளிக்கிறது என்பது பற்றிப் பார்க்கலாமா…
வள்ளுவர் அழகாக ஒரு குறள் சொல்வார். ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்புடைத்து என்று. அந்தக் குறளில் ஆமை தனக்குப் பிரச்சனை வரும்போது தன் உடலை சுருக்கிக் கூட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ளும். நிலைமை எல்லாம் சாதகமானதும்தான் வெளியே வரும். அது அந்தப் பிரச்சனையை எதிர்த்து வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போடாது. அதனால் அது நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது. அது போல ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கி பொறுமையுடன் வாழ்ந்தால் இந்த ஒரு பிறவி அல்ல. எழுகின்ற பிறவி எல்லாம் உயர்நிலை கிடைக்கும்.
நாம் எதை ஏத்துக்கணும். ஏத்துக்கக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தீயினால் சுட்ட புண் என்ற குறளில் வாயில் இருந்து வரும் வார்த்தைகள்தான் ரணமானது என்று சொல்லி இருப்பார். சிலருக்கு மனதைப் புண்படுத்துவதே வேலையாக இருக்கும். இன்னொரு வகை இடித்துரைத்துப் பேசுவது. மனம் நோகும்படி பேசினால் கோபம் வரும். இன்னொன்னு வேதனை வரும். உடனடியாக கோபமோ, வேதனையோ படக்கூடாது. இதை யார் சொல்கிறார்? அவங்கசொல்ற வார்த்தையில் உண்மை இருக்கா என உண்மைத்தன்மையை ஆராய்தல்.
அடுத்து அவர் சொல்வதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அதை நாம் இடித்து உரைத்தலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் நலன்மீது அக்கறை கொண்டதால் கூட கூறி இருப்பார். இடித்து உரைத்து சொல்லும்போதுதான் அது நம் மனசில் ஆழமாகப் பதியும். அதனால் அதற்கான வேலைகளைத் திருத்திக் கொண்டு திறம்படச் செய்வோம். சிலர் தேவையே இல்லாமல் கத்துவார்கள். அதைக் காதிலேயே வாங்கக்கூடாது.
சொல்றவங்க வேண்டப்பட்டவங்க. அவங்க இடித்துரைத்துத் தான் சொல்றாங்கன்னா சில சமயம் அதை நகைச்சுவையாக மழுப்பலாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறர் சொல்வது தவறு என்பது தெரிந்தால் அவர்களைத் தனியாகக் கூட்டிட்டுப் போய் இந்த மாதிரி சொல்ற வேலையை வச்சிக்காதீங்க. நான் பண்றது தப்புன்னா எங்கிட்ட நேரா சொல்லுங்க. நாலு பேரை வச்சிக்கிட்டு சொல்லாதீங்கன்னு சொல்லலாம். எப்பவுமே மகிழ்;ச்சியா, பேரானந்தமா நம் மனதை வைத்துக் கொள்ளும்போது நமக்கு கடுகளவு கூட பிரச்சனை வராது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



