வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை இப்பதிவின் மூலம் அறியலாம். பெரும்பாலான உடல் ரீதியான உபாதைகளைத் தீர்த்து வைப்பது இந்த உணவுகள் தான்.
இளஞ்சூடான நீரைக் காலையில் குடிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என பாருங்கள். முதலில் அவர்களது எடை குறையும். கழிவுகள் நன்கு வெளியேறும். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமானக்கோளாறு நீங்கும்.
வெந்தயத் தண்ணீர் காலை எழுந்ததும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்து விடும். அதே போல சீரகத்தண்ணீர் குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனைகள் தீர்ந்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.
தேன் எப்படி சாப்பிட வேண்டும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. ஆனால் வீடுகளில் வாங்கி வைத்திருப்பார்கள். இதை இளஞ்சூடான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
இது உடலுக்குப் பலத்தைத் தருவதோடு, சளி மற்றும் இருமலையும் போக்கி குரலை மென்மையானதாக்கும். அதிலும் முக்கியமாக ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானப்பிரச்சனையை தீர்க்கும்.
மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சிலர் தூக்கம் வராமல் இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது அருமருந்து. உடல் பருமனாக உள்ளவர்கள் கண்டிப்பாக இதைச் சாப்பிடுங்கள். உங்கள் உடலில் உள்ள ஊளைச்சதை கரைந்து ஸ்லிம்மாகி விடுவீர்கள்.
இதே போல முளைகட்டிய பயிறு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றையும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். உளுந்தங்களி பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும். அரிசி கஞ்சி முதுமையான தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.