அந்தக்காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் செலவு தானே என கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது அப்படி அல்ல.
முதலில் பெண் குழந்தைகள் பிறந்தால் சந்தோஷப்படுங்க. வீட்டுக்கு மகாலெட்சுமி வந்துட்டான்னு வரவேற்க வேண்டும். பெண் குழந்தைகளை வளர்க்கும்போது அவங்க எதுவும் தெரியலன்னு சொல்லக்கூடாது.
எல்லாத்தையும் கத்துக்கொடுங்க. இன்னைக்கு உள்ள காலகட்டத்துல ஆண்களுக்கு நிகரா எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதிச்சிட்டாங்க. அதனால எல்லலாவற்றையும் கத்துக்கொடுங்க. அதே போல சமையலையும் கத்துக்கொடுங்க.
சமையல் செய்வது பெண்களின் கடமை. அவர்கள் எவ்வளவோ பெரிய ஆளா வெளியில போய் வேலை பார்த்தாலும் வீட்டிற்கு வந்தால் கணவனுக்கு மனைவி. மாமனாருக்கு மருமகள். அதனால அவங்களே கையால சமையல் பண்ணினா எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நல்ல விருந்தோம்பல் செய்யக் கற்றுக்கொடுங்க. குழந்தைகளுக்கு பரிமாற கத்துக்கொடுங்க.
நல்ல கல்வி குழந்தைகளுக்கு அவசியம். ஒரு பெண்ணுக்கு கல்வி இல்லை என்றால் அந்தக் குடும்பம் முன்னேறாது. ஒரு பெண்ணுக்கு முக்கியமா நாம கொடுக்க வேண்டிய சொத்து கல்வி தான். அதே போல அடக்கம் என்ற நல்ல விஷயத்தைக் கத்துக்கொடுங்க.
பெரியவங்களப் பார்;த்தால் வணக்கம் சொல்லணும். தாத்தா பாட்டிய பார்த்தா அவங்களுக்கு சமமா உட்காரக்கூடாது. அவங்களுக்கு கீழே உட்கார சொல்லிக் கொடுங்க. அடக்கம் வேற…அடங்கிப் போதல் வேற…நிமிர்ந்த நடை, துணிச்சல், தைரியத்தைக் கத்துக் கொடுங்க. தனித்துவமாக இயங்கக் கற்றுக்கொடுங்க. ஒருவரிடம் பேசும் போது அவருடைய கண்ணைப் பார்த்துப் பேசக் கற்றுக்கொடுங்க.
ஒருவரது பார்வை சரியில்லேன்னா அவங்கக் கூட பழகவே கூடாது. இவர் பார்வை சரியில்லைன்னா தைரியமாகப் பெற்றோர்களிடம் பெண் குழந்தைகள் தெரிவிக்க வேண்டும். இந்தப் பக்குவத்தையும் பெற்றோர்கள் தான் சொல்லித் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பக்தியாக இருக்க வேண்டும். பண்பாட்டை வளர்ப்பவள் என்ற உண்மையை சொல்லித் தர வேண்டும்.
பக்தி இருந்தால் பெண்கள் தனக்கு எது தேவையோ அதைத் தானே கற்றுக் கொள்வாள். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒழுக்கமா வளர்வாங்க. தவறு செய்வதைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே நிறுத்தி விடுவாங்க. நல்ல ஆடை அணிய வேண்டும்.
ஒரு பெண்ணைப் பார்க்கும்போதே அந்தப் பெண்ணைக் கையெடுத்துக் கும்பிட தோண வேண்டும். கோவிலுக்குப் போகும்போதாவது நாகரிகமான உடையைத் தவிர்த்து நம் பாரம்பரிய உடையை அணிய கற்றுக்கொடுக்க வேண்டும். ஆண்குழந்தைகள் என்றால் நல்ல ஊட்டச்சத்தான உணவைக் கொடுப்பாங்க.
ஆனால் இப்போது அப்படி அல்ல. நல்ல ஆரோக்கியமான உணவை இளமையில் இருந்தே கொடுங்க. நல்ல அரவணைப்பக் கொடுங்க. பெண் குழந்தைகள் என்ன விருப்பப்படுகிறார்களோ அதை அவங்களுக்குக் கற்றுக் கொடுங்க. எல்லா திறமையும் அந்தப் பிள்ளைகளுக்கு வர வேண்டும். பிறர் அந்தப் பிள்ளைகளைப் பற்றி வாயாரப் புகழ்வதை நாம் பெற்றோராக இருந்து காது குளிர கேட்க வேண்டும்.