கோபத்தை அடக்க என்ன செய்றது? ரொம்ப ஈசியான வழி இதுதான்!

கோபம் வந்தால் அதை அடக்க நாம என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இன்று பலருக்கும் இந்த வழி தெரியாமல் தான் திணறி வருகிறார்கள். கோபத்தில் ஏதோதோ செய்வதறியாமல் பண்ணி விடுகிறார்கள். அதன்பிறகு அய்யய்யோ…

கோபம் வந்தால் அதை அடக்க நாம என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இன்று பலருக்கும் இந்த வழி தெரியாமல் தான் திணறி வருகிறார்கள். கோபத்தில் ஏதோதோ செய்வதறியாமல் பண்ணி விடுகிறார்கள்.

அதன்பிறகு அய்யய்யோ இப்படி ஆகிப்போச்சேன்னு காலம் முழுவதும் கண்ணீர் விடுகிறார்கள். அதே போல வார்த்தையை அடக்க முடியாமல் ஏதேதோ பேசி விடுகிறார்கள். அதன்பிறகு சொன்ன வார்த்தையை அள்ள முடியுமா அல்லது எடுக்கத்தான் முடியுமா?

அது சரி. கோபம் வந்தால் இப்ப எப்படி அடக்குவதுன்னு பார்க்கலாமா…

கோபம் வந்தால் அதை அடக்குவதற்கான முயற்சியில் மனதை அமைதியாக வைத்துக்கொண்டாலே போதும். அது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான திறமையை வழங்கும். சில விஷயங்களைப் பார்க்கும்போது எப்பவும் இது சரிவராதுன்னு தோணும். அப்படி புரிஞ்சிக்கறது கூட ஒரு வகையில் மெச்சூரிட்டி தான்.

தனக்கு வலிக்கும் என்றால் கவனமாக சிலர் பேசுவார்கள். அதே நேரம் பிறருக்கு வலிக்கும் என்றால் நமக்கா வலிக்கப் போகுது என்று அசால்டாகப் பேசுவார்கள். இதுதான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம் என்கிறார்கள்.

ஒருவனிடம் செல்வம் குவிந்து கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எதற்குச் சமம்னு தெரியுமா? வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள். ஊருக்கு நடுவே ஒரு நச்சு மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதில் காய்த்துக் குலுங்குகின்ற பழத்திற்குச் சமம் வெறுக்கப்படுகிறவன் சேர்த்து வைத்த செல்வம் என்கிறார் வள்ளுவர். அதனால் கூடிய மட்டும் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் வாழப் பழகுங்கள். அதுவே பெரிய சமூக சேவை தான்.