நீங்கள் மன உறுதிமிக்கவராக மாற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்கள்!

எந்த சூழலிலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க மன உறுதி தேவைப்படுகிறது. அதற்கு நாம் என்னென்ன செய்வதுன்னு பார்க்கலாமா… ஒரு மனிதன் என்ற ரீதியில் வாழ்க்கையே குழப்பமான சூழலில் இருக்கும்போது யாருடனும் டேட்டிங் செய்யாதீர்கள்.…

mind power

எந்த சூழலிலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க மன உறுதி தேவைப்படுகிறது. அதற்கு நாம் என்னென்ன செய்வதுன்னு பார்க்கலாமா…

ஒரு மனிதன் என்ற ரீதியில் வாழ்க்கையே குழப்பமான சூழலில் இருக்கும்போது யாருடனும் டேட்டிங் செய்யாதீர்கள். முதலில் பொருளாதார சிக்கல் இருந்தால் அதைச் சரிசெய்ய முயற்சி எடுங்கள். மனம் உடைந்த மனிதனுக்கு உலகில் வாழ்வதே பிடிக்காது.

உங்களை யார் யாரெல்லாம் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்களோ அவர்களை விட வேறு யாரும் கடுமையாகப் பார்க்க முடியாது. அதனால் அவர்களின் பார்வையைப் போக்க நீங்கள் கடினமாக உழைத்து ஜெயித்து அவர்கள் மத்தியில் முன்னேறிக் காட்டுங்கள்.

நீங்கள் தவிர்க்கும் ஒவ்வொரு கடினமான காரியங்களையும் நீங்கள் வேகமாக செய்யத் தொடங்குங்கள். எந்த அளவு வேகமாக செய்கிறீர்களோ அதே அளவு நீங்கள் நல்ல விஷயத்தையும் வாழ்க்கையில் கிடைக்கப் பெறுவீர்கள். எப்போதுமே எதிர்காலச் செலவைக் கருத்தில் கொண்டு உங்களது வாழ்க்கையை நகர்த்துங்கள். பல வருமான வழிகளைக் கண்டறியுங்கள். இது டிஜிட்டல் உலகம் என்பதை மறந்து விடாதீர்.

சம்பளம் மட்டும் வருமானமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வறுமை அருகிலேயே இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் 20 மணி நேரம் இருந்து என்ன பிரயோஜனம்? அது மேலும் சந்தேகத்தையும், பயத்தையும், நம்பிக்கை இன்மையும், தாழ்வு மனப்பான்மையையும் கொண்டு வந்து சேர்க்கும். 20 நிமிடமாவது உங்களுக்காக செலவிடுங்கள்.

வேகமும், முழுமையும் இருப்பது அவசியம். உங்களுக்குச் சொந்தமானதைப் பாதுகாப்பதில் கோட்டை விடாதீர்கள். நீங்கள் பிறந்த குடும்பத்தை விட நீங்கள் உருவாக்கும் குடும்பம் தான் முக்கியம். அடுத்தவரின் இலையைப் பார்த்து நீங்கள் பசியாறாதீர்கள்.

யாராவது சாபம் விட்டுள்ளார்களே எனப் பயப்படாதீர். அதை உடைத்து எறியுங்கள். அதற்காக தொடர்ந்து உங்கள் உடலையும், மனதையும் பலப்படுத்துங்கள். சமூக திறன்கள், சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள். வளர்ச்சியின் செலவு வலியாகத் தான் இருக்கும். மனதளவில் தோற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. உங்கள் மனநிலைக்கு எப்போதும் முன்னுரிமை கொடுங்கள்.