நான் ரொம்ப உடல் பருமனா இருக்கேன். இதை எப்படியாவது குறைக்கணும். அதுவும் ஒரே வாரத்துல குறைக்கணும்னு சொன்னா அது முடியுமா? இதுக்காக காலைல சாப்பிடவே கூடாதுன்னு பட்டினி கிடக்காங்க. இது ரொம்ப ரொம்ப தப்பு.
நமக்கு தினசரி தேவையான உணவு 64 கவளம். அதுல 32 கவளம் சாப்பிட்டாலே போதும். கவளம்கறது ஒரு கைப்பிடி அளவு. நாம கையால ஒரு தடவை எடுத்து சாப்பிடற அளவு. அந்த அளவு சாப்பிட்டு வந்தால் உடம்பு கண்டிப்பா ஏறவே ஏறாது.
இன்னிக்கு இருக்கிற உணவுகளும் சரியில்ல. உதாரணத்துக்கு காலைல தோசை சாப்பிடுவாங்க. முதல் தோசை சுட்டதும் சாப்பிட்டுவாங்க.

அடுத்த தோசை வரும் வரை வெறும் இலையா இருக்கும். அதுக்குள்ள முதல் தோசை உடலுக்குள்ள ஜீரணமாயிட்டு இருக்கும். அதுக்கான சுரபிகளை உடல் அதிகமா சுரந்து வச்சிருக்கும். இரண்டாவது தோசை வர லேட்டாகும்.
இதனால அந்த தோசை வரும்போது உணவும், அந்த மீதமுள்ள சுரபிகளும் சேர்ந்து செரிமானம் ஆக வேண்டியிருக்கும். இதுக்கான சக்தி வரும்போது உடல் எடை குண்டாயிடும். இதனால தான் 2 தோசை சாப்பிட்டாலும் உடல் எடை போட்டு விடுறாங்க.
இதுக்கான பாரம்பரிய மருந்து ஒண்ணு இருக்கு. அதுதான் இது. அடிக்கடி முருங்கைக்கீரையை சாப்பிடுறவங்க உடல் எப்பவுமே ஸ்லிம்மா இருக்கும். உணவை மட்டும் சாப்பிட்டுட்டு டிபனைக் கட் பண்ணிட்டு வந்தாலே உடல் அழகா இருக்கும். எடை போடாது. அதுக்கு வாய்க்கட்டுப்பாடு அவசியம்.
மருந்து தயாரிக்க
தேவையான பொருள்கள்

எலுமிச்சம்பழம்
சின்ன வெங்காயம்
தேன்
முருங்கைக்கீரை
எப்படி செய்வது?
முதலில் சின்ன வெங்காயத்தை நல்லா சுத்தம் பண்ணி எடுத்துக்கணும். அதை நல்லா அரைச்சி எடுங்க. இது கூட ஒரு எலுமிச்சம்பழம் எடுங்க. அதை சாறாக பிழிந்து விடுங்க. எந்த அளவு சாறு இருக்கோ அதே அளவு தேன் கலந்துக்கணும்.
அப்புறம் முருங்கைக்கீரையை அரைச்சி அரை ஸ்பூன் சாறோட எடுத்துக்கணும். இது கூட சம அளவு தேன் கலந்துக்கணும். இதைக் காலைல வெறும் வயித்துல இந்த மருந்தைக் குடிக்கணும். இந்த மருந்தைக் குடிச்ச பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்புறம் ஒரு கி.மீ. நடக்கணும்.
ரொம்ப குண்டா இருக்கறவங்க முதல்ல அரை கி.மீ நடந்தா போதும். தினமும் அப்படி நடந்து வரணும். எடுத்த உடனே 5 கி.மீ நடக்கணும்னு நடந்தா உடல் பிடிச்சிக்கிடும்.

அப்புறம் அசதி, காய்ச்சல்னு வந்துடும். உடங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நடங்க. இப்படி தினமும் மருந்தை சாப்பிட்டுட்டு நடந்தா உடல்ல தேங்கியுள்ள ஊளைச்சதைல உள்ள கொழுப்பு எல்லாம் நல்லா கரைஞ்சு ஸ்லிம்மா அழகா, வசீகரமான முகத்தோடு மாறிடுவீங்க.
ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா பின்பற்றணும். நடுவில எந்த உணவும் எடுக்கக் கூடாது. டீ காபி, பஜ்ஜி, வடை, சமோசா எல்லாம் சாப்பிட்டா உடல் எடை குறையாது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



