தினம் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் எடை குறைப்பு முதல் இதய பிரச்சனைகள் வரை உடலுக்கு பல்வேறு விதத்தில் பலன் கிடைக்குகிறது. இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
- செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது.
- பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
- பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
- செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
- செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
- செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
- இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.