நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் செய்த தவறு அவர்களுக்குத் தெரிவதில்லை. அந்த மாதிரி சொல்பவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். வாங்க பார்க்கலாம்.

சரியாக வாழக் கற்றுக் கொடுக்கிற ஒவ்வொரு வலியும் மிகச்சிறந்த ஆசானே. சந்தோஷம் என்றால் தனக்கு கிடைக்காவிடில் அடுத்தவருக்கு எப்படி கிடைக்கலாம் என்றும், துன்பம் என்றால் தனக்குக் கிடைத்தது ஏன் அடுத்த வருக்குக் கிடைக்கவில்லை என்றும் நியாயம் கேட்கிறது

மனப் போராட்டத்தில் தோல்வி என்பது வாழ்கையில் கற்றுத் தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. சில பிரச்சனைகள் வரும் போது நம் மனது அதிகமாக யோசிப்பதை விட, அமைதியாக, பொறுமையாக இருந்தாலே பிரச்சனையை சமாளிக்கும் மனநிலை வரும். எனவே அதிகமாக யோசிப்பதை தவிர்க்கவும்.

மனநிலை சமநிலையில் இருப்பவர்களால் மட்டுமே என்றும் உயர்நிலையை அடைய இயலும். மன உறுதியே நமக்கு பல தோல்விகளை சந்திக்க வைத்து வெற்றிக்கான பாதையை வகுத்து கொடுக்கிறது. புத்திசாலித்தனம் என்பது பெரிய விஷயங்களை பேசுவது அல்ல. சிறிய விஷயங்களையும் புரிந்து கொள்வது.

நம்பிக்கை தரும் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பயம் தரும் கற்பனைகள் தானாகவே விலகி விடும். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்..செய்ய முடியாதவன் போதிக்கிறான். நேரம் சரியில்லை இது திறமை இல்லாதவனின் வெத்துப் பேச்சு.. நேரம் பத்தல. இது வெற்றி வீரரின் உயிர் மூச்சு. பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது கூட. ஒரு வகையில் உதவி தான். பொறுமை பயன்படுவதுபோல் நேர்மை எல்லா இடங்களிலும் பயன்படாது.