இந்த சிம்பிளான உடற்பயிற்சி போதும்.. ரிஸ்க் இல்லாமல் உடல் பருமனைக் குறைக்கும் டிப்ஸ்

By John A

Published:

அறிவியலின் அசுரத் தனமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் புதிது புதிதாக சாதனங்கள் வந்து மனிதனின் வேலையை குறைத்துக் கொண்டே வருகிறது. இதனால் மனிதனுக்கு உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இதன் விளைவு உடல் பருமன். சாப்பிட்ட உணவிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லையெனில் உணவு செரிக்க தாமதமாகிறது. அடுத்த வேளைக்கு பசிக்கும் முன்னரே உணவினை உண்ணும் போது ஏற்கனவே செரிமாகதா உணவுடன் இதுவும் சேர்ந்து அதிகப்படியான கொழுப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் உடல் எடையும் தாறுமாறாக எகிறுகிறது.

இனி இப்படித்தான் வாழ்க்கை என்ற கட்டாய சூழலில் இருக்கும் நாம் இருந்த இடத்திலிருந்தே சில எளிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் எடையை சரியான விகிதத்தில் பராமரிக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் :
கீழே அமர்ந்து வீட்டுப் பாத்திரங்களை கழுவலாம். அப்படிக் கழுவ வசதியில்லாவர்கள் இதனைப் பின்பற்ற முடியாது. இதற்கு அடுத்ததாக வீட்டில் வாஷிங் மிஷினுக்குப் பதிலாக கைகளால் துணிகளைத் துவைக்கும் போது கைப் பகுதியில் உள்ள சதைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இதனால் கைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைகிறது.

கீழே சம்மணமிட்டு அமர்வது நன்மை பயக்கும். தொப்பை போடுவது குறைகிறது. மேலும் தரையில் அமர்ந்து காய் நறுக்குதல், துணி மடித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.

பொருட்கள் வாங்கச் செல்லும் போது அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள் வாங்குவது. தரையில் படுத்து கை, கால்களை நீட்டி படுக்கலாம். இது கை கால்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

மாலை வேளையில் குறைந்தது அரைமணிநேரமாவது காலாற நடைப்பயிற்சி செய்யலாம். முடிந்தால் அவ்வப்போது மௌனவிரதம் இருக்கலாம். இது மன அழுத்தம், நிம்மதி, ஆற்றல் போன்றவற்றைக் கொடுக்கிறது.

உணவு உண்ட உடனே உறங்கச் செல்வதாலும் தொப்பை ஏற்படுகிறது. எனவே சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். மலம் கழிக்காமல் காலை உணவினை உட்கொள்ளக் கூடாது. இரவு வயிறு முட்ட சாப்பிடாமல் பழங்களைச் சாப்பிடலாம்.

இத மட்டும் செஞ்சு பாருங்க.. உங்க உடல் எடை எப்படி மளமளவென குறையுது பாருங்க..!