ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?

கணவன், மனைவிக்குள் பிரச்சனை இன்று அதிகரித்து வருகிறது. ஒருவருக்கொருவர் ஈகோ மட்டும் காரணம் அல்ல. இருவருரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் இந்த சண்டை வருகிறது. அதற்கு என்னதான் வழி…

couples problem

கணவன், மனைவிக்குள் பிரச்சனை இன்று அதிகரித்து வருகிறது. ஒருவருக்கொருவர் ஈகோ மட்டும் காரணம் அல்ல. இருவருரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் இந்த சண்டை வருகிறது. அதற்கு என்னதான் வழி என்றால் ஆண் என்பவர் எப்படிப்பட்டவன்? பெண் என்பவர் எப்படிப்பட்டவள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் பெண் மனசைத் தெரிந்து கொள்வோம். ஏன்னா அதுதான் ஆழம் ஜாஸ்தி. வாங்க பார்க்கலாம்.

பெண்களைப் பற்றிய உளவியல் உண்மைகள்.

பெரும்பாலும் அன்பையோ, காதலையோ வெளிப்படுத்துவதில் ஆண்கள்தான் முதல் படி எடுத்து வைப்பார்கள். ஆனால் ஒரு பெண் அதைச் செய்தால்.. அவளைவிட இந்த உலகத்தில் யாராலும் உங்களை நேசிக்கமுடியாது என்பது உண்மை. பெண்களால் அதிகபட்சமாக ரகசியத்தை காப்பாற்ற முடிந்த நேரம் 47 மணி நேரம்.

பெண்ணை அன்புக்குரிய ஒருவர்.. இருபது நொடிகள் கட்டிப்பிடிக்கும்போது பெண்ணுக்கு மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் நினைவாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புத்திக்கூர்மை: பெண்களின் மூளை, ஆண்களின் மூளையைவிட அளவில் சிறியதாக இருந்தாலும்.. புத்திக்கூர்மையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆண்களைவிட பெண்களால் மற்றவர்களின் முகங்களை எளிதாக நினைவுகூற முடியும்.

ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்ச்சிகள் அதிகம், அதை அடக்கி ஆழ்வது.. ஆண்களைவிட பெண்களால் எளிதில் முடியும். பெண்களால் அதிக வலியையும் பொறுத்துக்கொள்ள முடியும். பெரும்பாலான பெண்கள் தங்கள் வலியை மௌனத்தால் மறைத்துக்கொள்ளக் கூடியவர்கள்.

உணர்ச்சி: பெண்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.. இதனால்தான் பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள். பெண்கள் அதிகம் அன்பு கொண்டவர்களிடம்.. எப்போதும் சண்டையிடவும், வாக்குவாதம் செய்யவும் விரும்புவார்கள்.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்.. அவளால் மறக்க முடியாத ஒரு ஆண் நிச்சயம் உண்டு. ஒரு விசயத்தில் முடிவு எடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். முடிவு எடுத்தபிறகு அதிலிருந்து அவர்களை மாற்றுவது மிகக் கடினம்.