நாம் செய்யும் எந்தவொரு நல்ல செயலை செய்தாலும் புண்ணியம் என்பது நிச்சயம் கிடைக்கும். புண்ணியம் நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது. நம் அடுத்த தலைமுறைகளுக்கும் புண்ணியம் சென்று சேரனும். வெறும் பணம், சொத்தினை சேர்த்து வைத்து பிரயோசனமில்லை. நாம் செய்யும் எந்தெந்த செயலுக்கு என்னென்ன புண்ணியம் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு கிடைக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாமா?!
அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். வயதானவர்களுக்கும், தாத்தா பாட்டிகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும். ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேருமென நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.