எச்சரிக்கை!!! எக்காரணம் கொண்டு தயிருடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!!!

நம்முடைய உணவு முறையில் மிக முக்கியமான ஒரு அங்கமாக தயிர் உள்ளது. தயிர் பல ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்தது. மேலும் புரோபயோடிக் பண்புகளுடன் புரதம், கால்சியம் நிறைந்ததாகவும் இந்த தயிர் இருக்கிறது. அனைவராலும் விரும்பி…

curd11

நம்முடைய உணவு முறையில் மிக முக்கியமான ஒரு அங்கமாக தயிர் உள்ளது. தயிர் பல ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்தது. மேலும் புரோபயோடிக் பண்புகளுடன் புரதம், கால்சியம் நிறைந்ததாகவும் இந்த தயிர் இருக்கிறது. அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது தயிர் எனலாம்.

ஆனால் தயிருடன் சில வகையான உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அவ்வாறு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

curd

வைட்டமின் சி உள்ள பழங்கள்:

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கிவி போன்ற பழங்களுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல. வைட்டமின் சி அமிலத்தன்மை உடையது. பாலை திரிந்து போக வைக்க கூடியது. அதனால் இது செரிமான சவுகரியத்திற்கு வழிவகுக்கும். இந்த கலவையானது தயிரில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதையும் தடுக்கலாம். அமிலத்தன்மை கால்சியம் வளர்ச்சிதை மாற்றத்தில் குறிக்கிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

lemon

நொறுக்குத்தீனிகள்:

சிப்ஸ் பொறித்த உணவுகள் அல்லது உப்பு கலந்த பருப்புகள் போன்ற நொறுக்கு தீனிகளுடன் தயிரை சேர்ப்பது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த திண்பண்டங்களில் உள்ள அதிக சோடியம் உள்ளடக்கம் தண்ணீரை தக்க வைத்து வீக்கம் மற்றும் அசவுகரித்தை அதிகரிக்கலாம். கூடுதலாக தயிரின் ப்ரோ பயாடிக் தன்மையில்  பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தயிரின் செயல் திறனை குறைக்கிறது.

potato chips

கொழுப்பு உணவுகள்:

கனமான கொழுப்பு நிறைந்த உணவுகளான வருத்த பொருட்கள் அதிக அளவு கிரீம் உணவுகள் போன்றவற்றுடன் தயிரை சேர்ப்பது செரிமானத்தை மெதுவாக்கும். செரிமான அமைப்புக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். அதிக கொழுப்பு உள்ளடக்கம் வயிறு காலியாவதை தாமதப்படுத்தலாம் வீக்கம் அஜீரணத்திற்கு காரணமாகலாம்.

curd1

சர்க்கரை உணவுகள்:

அதிகம் சர்க்கரை சேர்த்த உணவுகள், இனிப்புகள், இனிப்பு தானியங்கள் போன்றவற்றுடன் தயிரையும் உண்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்புக்கு கூட இது காரணமாகக்கூடும். சர்க்கரை உள்ளடக்கத்தால் குடல் பாக்டீரியாவில் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். தயிரின் புரோபயாட்டிக் நன்மைகளை இது பாதிக்கிறது. மேலும் சர்க்கரை மற்றும் பால் கலவையானது எடை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்ற சிக்கல்களை அதிகரிக்கும்.

coconut milk sweet

காரமான உணவுகள்:

மிகவும் காரமான உணவுகளுடன் தயிரை சேர்ப்பது செரிமான மண்டலத்தை எரிச்சல் அடைய செய்யலாம். அமில ரிப்ளக்ஸ் அல்லது இரப்பை அழற்சி போன்ற நிலைமைகளை மோசமாக்கலாம். மசாலா பொருட்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது தயிரின் அமைதியான இனிமையான விளைவுடன் மோதலாம். இந்த கலவையானது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட அசைவுகரியம் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

chilli chicken