நாம் எப்போதுமே நம்மை பிறருடன் ஒப்பிட்டு அல்லது நம்முடன் இருப்பவர்கள் அடுத்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டு நமக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதைப் பார்த்திருப்போம். அந்த நேரத்தில் தான் நாம்
பக்குவமான மனதுடன் செயல்பட வேண்டும். நாம் நமது மனதைப் பலப்படுத்த வேண்டும். பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
முகத்தோற்றம் தான் நம்மை யார் எனக் காட்டும் கண்ணாடி. அப்படி இருக்க அந்த கண்ணாடியைக் கொண்டு நாம் நமது முகத்தை எளிய முறையில் வசீகரப்படுத்தி விடலாம். அது எப்படி என்று பார்ப்போமா…
வசீகரமான முகம் தான் எல்லாவிதத்திலும் வெற்றியைத் தேடித் தரும். பொதுவாகவே சிலரது முகத்தில் இயற்கையாகவே வசீகரம் இருக்கும்.
இவர் எங்கு போய் உதவி கேட்டாலும் எளிதில் கிடைக்கும். இண்டர்வியூ போனாலும் சுலபமாக வேலை கிடைத்து விடும். இதில் நிற பேதம் தேவையில்லை. ஆனால் வசீகரம் இருக்கும். இவர்களிடம் தைரியமும்
சேர்ந்தே இருக்கும். எவ்விதத்திலும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்க மாட்டார்கள். அழகுக்கும், வசீகரத்துக்கும் வேறுபாடு உண்டு. வசீகரம் என்பது ஒரு வித ஈர்ப்பு.
இதற்கு தேவை பெரிதாக ஒன்றுமில்லை. கண்ணாடி மட்டும் தான். இது ஒரு எளிய பயிற்சியாக நீங்கள் தினமும் செய்து வரலாம்.
காலையில் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போதும், இரவு தூங்கப்போறதுக்கு முன்பும் இதை பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை நீங்கள் தனி அறையில் இருந்து தான் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இரவு தூங்கும்போது உங்கள் முகத்தை மட்டும் இன்ச் பை இன்சாக ரசித்துப் பாருங்க.
எங்கு கவனம் போகிறதோ அங்கு சக்தி பாயும். 2 நிமிடங்கள் வேறு எவ்வித சிந்தனையும் இல்லாமல் முகத்தைப் பாருங்க. வசீகரமான முகத்தை தந்த இந்த பிரபஞ்ச உலகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் எப்போதும் கடவுளிடம் சென்றாலும் வேண்டுதலைத் தான் தெரிவிப்போம். ஆனால் நன்றியை சொல்பவர்கள் வெகு குறைவு தான். இன்னொரு முக்கியமான விஷயம். நாம் பார்க்கும் முகக் கண்ணாடியை நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஒரு மாதம் செய்து பாருங்க. அப்புறம் உங்க லெவலே வேறு தான்.
வாழ்க்கைல நாம எப்பப் பார்த்தாலும் கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கணுமா?ன்னு நினைப்பவங்க இதை மட்டும் சொல்றபடி செஞ்சு பாருங்க. முதல்ல வேடிக்கையாகத் தான் இருக்கும். அப்புறம் நீங்க மாற மாற உங்களுக்கே உங்க மேல ஒரு அதீத தன்னம்பிக்கை வந்துவிடும். வெற்றி உஙகள் கதவை வந்து தட்ட ஆரம்பித்து விடும்.