நிச்சயமாய் வணங்கலாம்! ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.
எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்கு வகைகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.
இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம்பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள்.அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. வெள்ளெருக்கு வேரில் செய்த வினாயகரை வணங்குவது நன்மை பயப்பதோடு நாள்படவும் வரும்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம். வெள்ளெருக்கு தேவ விருட்சமென சொன்னால் மிகையாகாது. வெள்ளெருக்கு செடி வீட்டில் இருக்கும் பட்சத்தில் துளசிக்கு எப்படி மரியாதை செய்து புனிதமாய் கருதி பயபக்தியாய் வணங்குவோமோ அப்படியே வெள்ளெருக்கு செடிக்கும் செய்ய வேண்டும்.