1. வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதைக் குறைத்துக் கொண்டால் ஒட்டடைகள் படியாது.
2. சோப்புத்தண்ணீரில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து வீட்டைதுடைத்தால் வீடு முழுவதும் மணமாக இருக்கும்.
3. துருப்பிடித்த பூட்டுகளுக்கு எண்ணெய் தடவினால் அழுக்குபடிந்து மேலும் இறுகி விடும்.எண்ணெய்க்கு பதிலாக பவுடரை தூவி பிறகு திறந்தால் ஈசியாக இருக்கும்.
4. மெழுகுவர்த்திகளை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து உபயோகப்படுத்தினால் திரி எரியும்போது சீக்கிரத்தில் உருக்காது. அதிகநேரம் எரியும்.
5. மிக்ஸி ஜார்களில் வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு சிறிது சோப்புத்தூள் கலந்து மிக்ஸியில் ஒரு ரவுண்ட் அடித்துக்கொண்டால், ஜார் நன்கு சுத்தமாகும்.
6. சாக்பீஸ்களை பொடி செய்து ட்யூப் லைட்டை சுற்றி தடவி வைத்தால் பல்லிகள் வராது.
7. இது மல்லிகைப்பூ சீசன். மல்லிகைப்பூவை கட்டி காற்று புகாத சில்வர், பிளாஸ்டிக் டப்பாக்களில் இறுக மூடி ஃப்ரிட்ஜ்ல வைத்தால் ஒருவாரம்வரை புதுசா இருக்கும்.
8.மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது, விரிசலும் ஏற்படாது.
9. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
10. அசைவம் சமைத்த பாத்திரத்தில் கெட்ட வாடை வீசாமல் இருக்க, சிறிது புளி போட்டு தேய்த்து கழுவி, வெயிலில் வைத்து எடுத்தால் கெட்ட வாடை வீசாது…
வீட்டுக்குறிப்புகள் தொடரும்…