கார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்

இன்று கார்த்திகை தீப பெருவிழா. அனைவர் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவார்கள். நம் துன்பத்தை அக்னியிடம் சொன்னால் அக்னி வடிவத்தில் இருக்கும் இறைவன் அதை எரித்து விடுவார். வீட்டில் பொதுவாகவே தினமும் விளக்கு…

இன்று கார்த்திகை தீப பெருவிழா. அனைவர் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவார்கள். நம் துன்பத்தை அக்னியிடம் சொன்னால் அக்னி வடிவத்தில் இருக்கும் இறைவன் அதை எரித்து விடுவார்.

1f20598bbec55f9d3b9f343c54e7188e

வீட்டில் பொதுவாகவே தினமும் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்ல பலனை தரும். எங்கும் முக்கிய காரியங்கள் செல்லும் முன் விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றால் மனதும் சந்தோஷமாக இருக்கும் செல்லும் இடங்களிலும் அனைத்தும் சுபமாக நடக்கும்.

கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் குறையும் இன்பங்கள் மறையும்.

ஹிந்து சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு சம்பிரதாயங்கள் உண்டு. அகல் விளக்கில் விளக்கெண்ணெய், நெய், பஞ்சக்கூட்டு எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவைகளில் உங்களது வசதிக்கு ஏற்றவாறு ஏதாவது விட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

சில வருடங்களாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து தீபம் ஏற்றுவது அதிகரித்து வருகிறது. அகல் விளக்கில் எண்ணெய் விட்டு இரண்டு விளக்குகளாவது ஏற்றினால்தான் சிறப்பான பலன்களை தரும்.

மெழுகு தீபத்தை தவிர்த்து மண்ணிலானஅகல் விளக்கு வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுங்கள் அனைத்தும் சிறக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன