கோடை காலத்தில் வெந்நீரில் குளிக்கலாமா…? அது உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா…?

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வெந்நீரில் தான் குளிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஹீட்டர் என்ற ஒன்றே கிடையாது. உடம்பு சரியில்லை என்றால் தான் வெந்நீரில் குளிப்பார்கள். மற்ற தினங்களில் முழுவதுமாக சாதாரண குளிர்ந்த…

shower

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வெந்நீரில் தான் குளிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஹீட்டர் என்ற ஒன்றே கிடையாது. உடம்பு சரியில்லை என்றால் தான் வெந்நீரில் குளிப்பார்கள். மற்ற தினங்களில் முழுவதுமாக சாதாரண குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். அதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது எல்லோருடைய வீடுகளிலும் ஹீட்டர் என்ற ஒன்று இருக்கிறது. வெந்நீரில் குளித்தால் தான் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது ஒருவகையில் ஏற்புடையதாக இருந்தாலும் இந்த பழக்கம் தொடர்வதால் கோடை காலத்திலும் வெந்நீரில் குளிப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி கோடைகாலத்தில் வெந்நீரில் குளிப்பது நல்லதா கெட்டதா அது உடல் நலத்திற்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி இனி காண்போம்.

கோடைக்காலத்தில் வெந்நீரில் குளிப்பது என்பது அவ்வளவு நல்ல பழக்கம் கிடையாது. இதனால் உயர் ரத்த அழுத்தம் சருமம் ஈரப்பதத்தை இழத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

சருமத்தில் உள்ள எண்ணெய் சத்தை குறைய செய்து தோள் எரிச்சலை இந்த கோடைகாலத்தில் வெந்நீர் குளியல் ஏற்படுத்துகிறது. இதய நோய் உள்ளவர்கள் கோடை காலத்தில் வெந்நீரில் குளிப்பது மிகவும் ஆபத்தானது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம்.

அதேபோல் கோடை காலத்தில் வெந்நீரில் தலைக்கு குளிப்பவர்களுக்கு அதிகப்படியான முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஏற்கனவே கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் அதே நேரத்தில் நாம் சூடான தண்ணீரில் குளிக்கும் போது நாம் உடலின் வெப்பநிலை அதிகரித்து அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது.