சுடச்சுட “முட்டைகோஸ் மஞ்சூரியன்” செய்வது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!

மாலைப்பொழுது வந்துவிட்டாலே போதும் சுட, சுட டீயுடன் எதையாவது கொறிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதற்காக சிப்ஸ், முறுக்கு, பஜ்ஜி, போண்டா என எண்ணெய் அயிட்டங்களை சாப்பிடாமல் கொஞ்சம் சத்தாக எதையாவது முயற்சிக்கலாம்.…

Chinese Dry Manchurian balls No onion No garlic

மாலைப்பொழுது வந்துவிட்டாலே போதும் சுட, சுட டீயுடன் எதையாவது கொறிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதற்காக சிப்ஸ், முறுக்கு, பஜ்ஜி, போண்டா என எண்ணெய் அயிட்டங்களை சாப்பிடாமல் கொஞ்சம் சத்தாக எதையாவது முயற்சிக்கலாம். கீழே முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி என்பது பற்றிய முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா கலவைக்கு

1. முட்டைக்கோஸ் – 200 கிராம்

2. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி

3. கரம் மசாலாதூள் – 1/4 மேசைக்கரண்டி

4. இஞ் பூண்டு விழுது – சிறிது

5. கார்ன்ஃபிளவர் – 25 கிராம்

6. மைதா மாவு – 50 கிராம்

7. உப்பு – தேவையான அளவு

வதக்க

8. பூண்டு – 8 பற்கள்

9. பெரிய வெங்காயம் – 1

10. பச்சை மிளகாய் – 1

11. தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி

12. ரெட் சில்லி – 1 தேக்கரண்டி

13. சோயா சாஸ் – சிறிது

14. மிளகுத்தூள் – சிறிது

செய்முறை:

முட்டைகோஸை நன்றாகக் கழுவித் துருவிக் கொள்ளவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசாலாப் பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாகப் பிசறவும் தண்ணீர் தேவை என்றால் மட்டும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதைச் சிறு உருண்டையாகப் பிடித்துப் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் தக்காளி சாஸ், ரெட் சில்லி, சோயா சாஸ் கலந்து, மிளகுத்தூள் சிறிது போட்டு வதக்கவும்.

அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது, சிறிது கார்ன்ஃபிளவர் மாவைத் தண்ணீரில் கலக்கி ஊற்றிக் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் பொரித்த முட்டைக்கோஸ் மசாலா உருண்டையைப் போட்டுச் சிறிது கெட்டியானதும் இறக்கிப் பரிமாறலாம்.

குறிப்பு:

மல்லித்தழை, வட்டமாக வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை தூவி அலங்கரித்தும் பரிமாறவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன