பிரபலமாகும் முகத்தில் செய்யும் ஐஸ் மசாஜ்… இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அழகை பராமரிக்க பல விஷயங்களை செய்கிறார்கள். சிலர் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தே என்ன செய்ய…

ice

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அழகை பராமரிக்க பல விஷயங்களை செய்கிறார்கள். சிலர் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தே என்ன செய்ய முடியுமோ இயற்கை பொருட்களை வைத்து பேசியல் செய்வதுண்டு. அதில் பல பிரபலங்கள் அதிகமாக செய்யும் ஐஸ் மசாஜ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த ஐஸ் மசாஜினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இனி காண்போம்.

முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வதுதான் பேஸ் மசாஜ் என கூறப்படுகிறது. சிலர் ஒரு பெரிய கோப்பையில் ஐஸை போட்டு ஜில்லென்று தண்ணியை நிரப்பி அதில் முகத்தை வைத்து எடுப்பது கூட உண்டு. இதனால் முகம் பொலிவு பெறும் என்று கூறப்படுகிறது. இப்படி முகத்தில் ஐஸ் வைத்து மசாஜ் செய்யும்போது முகத்தில் இருக்கும் வீக்கம் குறைகிறது.

ஐஸ் மசாஜை தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் இருக்கும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஆக்ஸிஜன் பரவுவதால் பளபளப்பான சருமம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது.

முகத்தில் ஐஸ் மசாஜை அடிக்கடி செய்து வரும்போது முகம் ரிலாக்ஸ் ஆவதுடன் புத்துணர்ச்சியாக்கவும் உதவுகிறது என்று கூறுகிறார்கள். ஐஸ் மசாஜ் ஆனது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி இயற்கையான பளபளப்பை தருகிறது. சருமத்தை இறுக்கம் அடைய செய்வதால் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. அதனால் ஐஸ் மசாஜ் செய்வது நன்மைதான்.