கோபம் ஒருவருக்குப் பொத்துக்கொண்டு வரும்போது அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. வார்த்தைகளில் கனல் தெறிக்கும். சில நேரங்களில் உச்சபட்ச கோபத்தில் பக்கத்தில் இருப்பவர் யார் என்று கூட பார்க்க மாட்டார். அடிக்க கையை ஓங்குவார். சில சமயம் அடித்தே விடுவார். அதன்பிறகு நாள் முழுக்க உட்கார்ந்து உட்கார்ந்து ரொம்பவே ஃபீல் பண்ணுவார்.
‘அடச் சே..’ முட்டாள்தனம் பண்ணிட்டோமே என்று. இதுமாதிரியான கோபம் பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள், மனைவி, பிள்ளைகளிடம் தான் வரும். கோபம் வந்தால் நினைவில் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்… கோபம் என்பது ஒரு சோதனை. அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதுதான் உண்மையான வெற்றி.
கோபம் உங்களை பலவீனமாக்கும். ஆனால், பொறுமை உங்களை வலிமையாக்கும். கோபம் உங்களுடைய இதயத்தையும், உடலையும் சோர்வடையச் செய்கிறது. அமைதி, உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது. கோபம் வந்தால் பிறரைக் குறை சொல்லாதீர்கள்.
அந்த உணர்வை சமாளிப்பது உங்கள் பொறுப்பு. நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையையும் கட்டுப்படுத்த முடியும். சிலர் கோபத்தில் பேசாமல் இருப்பார்கள். அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. அறிவாளிகள். வாழ்க்கை குறுகியது.
அதில் கோபம் காட்டுவதற்குப் பதில் பாசம் காட்டுவது நல்லது. மகாகவி பாரதியாரோ ‘ரௌத்திரம் பழகு’ என்று சொல்லி இருக்கிறார். அதனால் நம் பக்கம் நியாயம் இருக்கும்பட்சத்தில் கோபத்தைக் காட்டுவதில் தவறு இல்லை. நீங்கள் அதிகாரியாக இருக்கும்போது கோபத்தைக் காட்டினால் தான் அங்கு தவறுகள் களையப்படும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



