நினைத்த காரியங்கள் ஈசியா நடக்கணுமா? இதோ அந்த 5 ரகசியங்கள்!

நீங்க நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க வைப்பதுதான் ஈர்ப்பு விதி. சில காரியங்கள் நடக்கணும்னு நினைப்போம். ஆனா அது தன்னால நடக்கும். ஒரு நண்பரைப் பார்க்கணும்னு நினைச்சிருப்போம். ஆனால் அது நடந்து விடும். எல்லாருமே…

நீங்க நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க வைப்பதுதான் ஈர்ப்பு விதி.

சில காரியங்கள் நடக்கணும்னு நினைப்போம். ஆனா அது தன்னால நடக்கும். ஒரு நண்பரைப் பார்க்கணும்னு நினைச்சிருப்போம். ஆனால் அது நடந்து விடும். எல்லாருமே தெரிந்தோ தெரியாமலோ அது நடக்கும். ரஜினிகாந்த் கூட ஒருமுறை பேசும்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த அவமானம் பற்றியும், அதன்பிறகு இதே ஏவிஎம் ஸ்டூடியோவுல ஒருநாள் நான் ஃபாரின் கார்ல வந்து இறங்குவேன்னு சொல்வார். அதுகூட ஈர்ப்பு விதி தான்.

ஒவ்வொரு நாள் காலையில் எழும்போது இன்னைக்கு இந்தெந்த காரியங்களைப் பண்ணனும்னு பிளான் போட்டு பேப்பர்ல எழுதுனா கூட அது ஈர்ப்பு விதிதான். இந்த விஷயத்தை நான் இன்னைக்குள்ள முடிச்சே ஆகணும்கற ஒரு அவசரம், காரணம் எவ்வளவுக்கு எவ்வளவு வலுவா இருக்குமோ அந்த வகையில் உங்க எண்ணம் சீக்கிரமாக நிறைவேறும்.

எந்த வேலையை முதல்ல செய்யணும்? எந்த வேலையை அப்புறம் செய்யணும்கற தெளிவு இருக்கணும். நம்ம மூளையில் ஒரு பகுதி அமிக்டாலா. இது மூளையின் செக்யூரிட்டி மாதிரி. ஒரு சின்ன பயம் வந்தாலும் இது உடனே சத்தம் போடும்.

என்ன நடக்குமோங்கற பயம் வரும்போது இந்த அமிக்டாலா பயத்தை உணரும். நினைச்சது நினைச்சபடி நடக்காது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் தெளிவான திட்டம் இருந்தா லா ஆஃப் அட்ராக்ஷன் வேலை செய்யும்.

பயமே இருக்காது. நினைச்சது நினைச்சபடி நடந்தே தீரும். மரண தண்டனை கைதிகளைத் தூக்குப் போடுற அன்னைக்கு ரொம்ப அமைதியாக ரிலாக்ஸா இருப்பாங்க. அவங்களுக்கு இதுதான் நடக்கப் போகுதுங்கற தெளிவு இருக்கு. கடைசி நேரத்துல நம்மை யாராவது வந்து காப்பாத்துவாங்களா? நம்ம பொழைச்சிக்குவோமாங்கறது எண்ணமே இருக்காது. அதே மாதிரி நான் நினைச்சதை நினைச்ச மாதிரி நடத்திக் காட்டுவேன்கற தெளிவு இருந்தா அது நிச்சயமா நடக்கும். காலைல 6 மணில இருந்து 10 மணிக்குள்ள இதை நடத்தியேக் காட்டுவேன்கற தெளிவு இருந்தா போதும். ஈர்ப்பு விதி வேலை செய்யும்.

சில விஷயம் நினைச்சது நடக்குமான்னு தெரியலன்னாலும் நம்பிக்கையோட இருக்கும்போது மூளையில் உள்ள அமிக்டாலா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். கோவில்ல 41நாள் விரதம் இருக்கும்போது அவங்க உறுதியான கடவுள் நம்பிக்கையில் இருப்பாங்க. அதுதான் ஈர்ப்பு விதியிலயும் நடக்கும். அதே போல நிறைய வாய்ப்புகள் இருந்தா ஈர்ப்பு விதி வேலை செய்யாது. நமக்கு வாய்ப்புகள் குறைவா இருக்கும்போது ஈர்ப்பு விதி வேலை செய்யும். வாய்ப்புகள்ல ஒரு தெளிவு இருக்கணும். நமது நோக்கம் இலக்கை நோக்கியே இருக்கணும்.

ரகசியங்கள் இதுதான். என்ன வேணும்னு தெளிவா பிரபஞ்சத்துக்கிட்ட கேளுங்க. அதை நம்புங்க. அதனால பிரபஞ்சம் உங்களுக்கு அதைக் கொண்டு வந்து சேர்க்கும். பிரபஞ்சம் நமக்குத் தரணும்னா நான் என்னென்ன பண்ணனும்னு பிளான் போடுங்க. ஒரு வங்கித் தேர்வில் வெற்றி பெறணும்னா முதலில் விண்ணப்பிக்கணும்.

தினமும் அதுக்காகப் படிக்கணும். என்னோட மனசையும், உடம்பையும் ஆரோக்கியமா வச்சிக்கணும். அந்த பரிட்சையைக் கிளியர் பண்ண ஏதாவது ட்ரிக் இருக்கான்னு பார்த்து அதை செயல்படுத்தணும். இதை சரியா பின்பற்றினா பிரபஞ்சம் தன்னால உங்களுக்கு அந்த வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ட்ராபிக்ல ரெட் கலர் சிக்னல் விழுந்தா நாம நிற்கணும். அதுக்கு எல்லாரும் ஒத்துப் போறதனால தான் ட்ராபிக் இல்லாம இருக்கு. அப்படித்தான் நீங்க போடுற லிஸ்ட் உங்க மூளையோட பவர்ஃபுல் டூல். உங்களுக்கு தெளிவான திட்டத்தைத் தருது. வாழ்க்கையை ஃபோகஸா மாற்றுது. உங்களை மதிப்பானவராக மாற்றுது. இதையே ஆங்கிலத்தில் Ask, Believe, To do list, Action, Receive என 5 ரகசியங்களாக வைத்துள்ளனர்.