யோகா என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்திட உதவும் ஒரு சிறந்த பயிற்சி. உடல் ஆரோக்கியத்தையும் நெகிழ்வு தன்மையையும் பெற தொடர்ச்சியான யோகா பயிற்சி உதவுகிறது.
இந்தியாவில் தோன்றி இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு பயிற்சியாக யோகா உள்ளது. பல்வேறு நிலைகளையும் ஆசனங்களையும் உள்ளடக்கிய இந்த யோகாவை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை நாம் பார்க்கலாம்.
1. யோகா 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே யோகாவின் வயது ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகும்.
2. மேற்கத்திய நாடுகளுக்கு இந்த யோகா 1893 ஆம் ஆண்டுக்குப் பிறகு பரவத் தொடங்கியது.
3. யோகா என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையாகும் யுஜ் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததே யோகா. இதன் பொருள் இணைத்தல் என்பதாகும்.
4. இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி முனிவரால் யோகா வகுத்து கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
5. கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்கர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்கள் வருடத்திற்கு 5.7 பில்லியன் டாலர்களை யோகாவிற்காக செலவிடுகிறார்கள். உலகம் முழுவதும் 300 பில்லியன் மக்கள் யோகாவில் ஈடுபடுகிறார்கள்.
6. யோகா பயிற்சியில் ஈடுபடுபவர்களில் 72% பேர் பெண்களே ஆவர்.
7. யோகாவில் மொத்தம் எட்டு கிளைகள் உள்ளன. 84 பழமை வாய்ந்த ஆசனங்கள் உள்ளது.
8. ஆசனம் என்பது யோகாவின் ஒரு சிறு பகுதியே ஆகும். ஆசன நிலைகளை தாண்டி யோகாவில் இன்னும் பல இருக்கின்றது.
9. யோகாவில் ஆண் பயிற்சியாளர்களை யோகி என்றும் பெண் பயிற்சியாளர்களை யோகினி என்றும் அழைப்பர்.
10. இந்தியாவிலேயே மிகவும் வயதான யோகா ஆசிரியராக இருந்தவர் கோவை அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நானம்மாள் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். 90 வயது வரை யோகா கற்பித்துள்ளார்.
11. 2016 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கின் பொழுது யோகா அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் விளையாட்டாக அறிவிக்கப்பட்டது. அந்த ஒலிம்பிக் போட்டியில் பிரியானா பெர்னல் என்பவர் வெற்றி பெற்றார்.
12. கண்ணாடியின் முன் நின்று யோகா செய்யக்கூடாது.
13. தலைகீழாக நிற்கும் ஆசன நிலையானது மிகவும் ஆபத்தான ஆசனமாக கூறப்படுகிறது.
14. யோகாவிற்கு என்றே நூறு வகையான பள்ளிகள் இருக்கின்றன.
15. இந்திய அஞ்சல் துறை ஆனது 2015 ஆம் ஆண்டு யோகாவின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக யோகா தினத்தன்று அஞ்சல் தலை வெளியிட்டு யோகாவை சிறப்பித்தது.