10 அடி நீள தோசையை முழுசா சாப்பிட்டால் இவ்வளவு பரிசா?

டெல்லியில் உணவகம் ஒன்று அறிவித்துள்ள போட்டி, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உணவு தொடர்பாக ஏதாவது வீடியோ அல்லது வித்தியாசமான செய்திகள் வெளியானால் அவை உடனே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரவாகி விடுவது வழக்கம்.…

dosa

டெல்லியில் உணவகம் ஒன்று அறிவித்துள்ள போட்டி, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உணவு தொடர்பாக ஏதாவது வீடியோ அல்லது வித்தியாசமான செய்திகள் வெளியானால் அவை உடனே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரவாகி விடுவது வழக்கம்.

அப்படித்தான் டெல்லி உத்தம் நகரில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளது. 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிட்டால் 21,000 ரூபாய் பரிசு என்பது தான் அது.

அத்துடன உணவகத்தில் பத்தடி நீளம் ஓசை எப்படி தயாராகிறது என்றார் வீடியோவும் வெளியாகியுள்ளது. முதலில் கல்லில்  தோசையை ஊற்றி அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மொறு, மொறுவேன வட்ட வடிவில் சுற்றி, அதன்மீது மழைச்சாரல் போல் சீஸ்யை தூவி, பல வகை சட்னிகள் உடன் பரிமாறுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தோசை இன் விலை 1500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன